மைதானத்தில் இருந்து வெளியேறிய ரோஹித். சிறிதுநேரம் கேப்டனாக மாறிய கே.எல் ராகுல் – என்ன நடந்தது?

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது அக்டோபர் 22-ஆம் தேதியான இன்று தர்மசாலா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது :

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரல் மிட்சல் 130 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும், சிராஜ் 1 விக்கெட்டையும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியானது விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் செய்கையில் மோசமான அவுட்ஃபீல்டு (மைதானத்தின் தன்மை) காரணமாக போட்டியின் ஆரம்பத்திலேயே காயத்தை சந்தித்தார். அதன்படி பத்தாவது ஓவரின் போது காயத்தை சந்தித்த ரோகித் சர்மா பெரிய அளவில் பாதிக்கப்படுவாரோ? என்ற அச்சமும் ஏற்பட்டது.

- Advertisement -

ஆனால் நல்ல வேலையாக பெரிய பாதிப்பு எதையும் சந்திக்காத ரோஹித் உடனடியாக முதலுதவியை பெற்றுக் கொண்டு குறுகிய இடைவெளியில் களத்திற்கு திரும்பிவிட்டார். அந்த நேரத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் பொறுப்பு கேப்டனாக ஒரு சில ஓவர்களை கவனித்துக் கொண்டார்.

இதையும் படிங்க : மாஸ் பந்தை வீசி கேப்டனை சாய்த்த குல்தீப்.. சிரித்த ரோஹித் சர்மா.. திணறடித்த மிட்சேல் – ரவீந்தரா

ஏற்கனவே தர்மசாலா மைதானத்தில் உள்ள அவுட்ஃபீல்டு மிகவும் மோசமாக உள்ளது என்று பல வெளிநாட்டு வீரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்த வேளையில் இன்றும் இந்திய வீரர்கள் ஆங்காங்கே பீல்டிங் செய்யும் போது காயப்பட்டதும், மைதானம் பெயர்த்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. இப்படி இந்த மைதானத்தின் மோசமான நிலையை சுட்டிக்காட்டி ரசிகர்களும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement