மாஸ் பந்தை வீசி கேப்டனை சாய்த்த குல்தீப்.. சிரித்த ரோஹித் சர்மா.. திணறடித்த மிட்சேல் – ரவீந்தரா

Kuldeep yadav
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதுவரை தோல்விகளை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகள் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மேலும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தாக்கூர் நீக்கப்பட்டு முகமது ஷமி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய நியூசிலாந்துக்கு நட்சத்திர வீரர் டேவோன் கான்வே ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மற்றொரு துவக்க வீரர் வில் எங்கை 17 ரன்களில் ஷமி கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

திணறடித்த ஜோடி:
அதனால் 19/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூசிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். குறிப்பாக அதில் ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்ச்சை ரவீந்திர ஜடேஜா கோட்ட்டை விட்டதை பயன்படுத்திய ரச்சின் ரவீந்திரா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு சவாலாக மாறினார்.

இதற்கிடையே மற்றுமொரு கேட்சை பும்ரா தவற விட்டதை பயன்படுத்திய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல மிகப்பெரிய சவாலாக மாறி 34 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்தை வலுப்படுத்தியது. அதில் ஒரு வழியாக ரவீந்திரா 75 (87) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் டாம் லாதம் நிதானமாக விளையாட முயற்சித்தார்.

- Advertisement -

அப்போது சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தொடர்ந்து 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி அவருக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சொல்லப்போனால் டார்ல் மிட்சேலுக்கு எதிராக 113.5 கி.மீ பந்தை வீசிய அவரை பார்த்து “நீ ஸ்பின்னர் தானே இவ்வளவு வேகத்தில் வீசுற” என்பது போல் ரோஹித் சர்மா சிரித்தார். இருப்பினும் அதே வேகத்தை பயன்படுத்திய குல்தீப் விரைவாகவே லாதமை 5 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்து அடுத்து வந்த கிள்ன் பிலிப்ஸையும் 23 ரன்களில் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க:இவரா அல்வா கேட்ச்சை விட்டாரு.. முதல் பந்திலேயே மிரட்டிய ஷமி.. மெடலை வாங்கும் ஸ்ரேயாஸ்?

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய டார்ல் மிட்சேல் இந்த உலகக் கோப்பையில் சவாலான இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்து அசத்தினார். அதனால் சற்றுமுன் வரை நியூசிலாந்து 45 ஓவர்களில் 245/5 எடுத்துள்ளது

Advertisement