இவரா அல்வா கேட்ச்சை விட்டாரு.. முதல் பந்திலேயே மிரட்டிய ஷமி.. மெடலை வாங்கும் ஸ்ரேயாஸ்?

Jadeja Catch
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தரம்சாலா நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 21வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்துள்ள இவ்விரு அணிகளில் விராட் கோலி, ட்ரெண்ட் போல்ட் போன்ற நட்சத்திரங்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டிக்காக ரசிகர்களிடம் அதிகப்படியான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தாக்கூர் கழற்றி விடப்பட்டு சூரியகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரில் டேவோன் கான்வே கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

குறிப்பாக அவர் கொடுத்த கேட்ச்சை மிகச் சரியாக தாவிப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியின் முடிவில் சிறந்த ஃபீல்டருக்கான விருதை எனக்கு கொடுங்கள் என்று சைகை காட்டி அசத்தினார். அந்த சூழ்நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய வில் எங் 17 ரன்களில் இருந்த போது முகமது ஷமி வேகத்தில் கிளீன் போல்டானர். அதிலும் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக வாய்ப்பு பெற்ற முகமது ஷமி தம்முடைய முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து தம்முடைய தரத்தை காட்டினார் என்றே சொல்லலாம்.

அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். ஆனால் அதில் ரச்சின் ரவீந்தர கொடுத்த எளிதான கேட்ச்சை பாய்ண்ட் திசையில் நின்று கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா சரியாகப் பிடிக்காமல் கோட்டை விட்டது மொத்த ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் உலக அளவில் நம்பர் ஒன் ஃபீல்டராக இருக்கும் அவர் கடந்த போட்டியில் அபாரமான கேட்ச் பிடித்து விருதை வாங்கினார்.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் இப்போட்டியில் துரதிஷ்டவசமாக அந்த கேட்சை விட்டதை பார்த்து பெவிலியனில் இருந்த ஜடேஜாவின் மனைவியும் வாய் மீது கை வைத்து ஆச்சரியம் கலந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். மேலும் 10 ரன்னில் கொடுத்த கேட்ச் விட்டதற்காக பாகிஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்த டேவிட் வார்னர் போல் ஜடேஜா விட்ட கேட்ச் அமைந்து விடக்கூடாது என்பதே இந்திய ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

இதையும் படிங்க: நீங்க இப்டி செய்வீங்கன்னு எதிர்பாக்கல.. விராட் கோலி மீது புஜாரா – ஹெய்டன் அதிருப்தி

இதற்கிடையே கேப்டன் ரோகித் சர்மா காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறி முதலுதவிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் களத்திற்கு வந்தார். அதைத்தொடர்ந்து நடைபெறும் போட்டியில் இந்திய பவுலர்கள் சவாலை கொடுப்பதால் சற்று மெதுவாகவே விளையாடி வரும் நியூசிலாந்து சற்று முன் வரை 2 ஓவர்களில் 107/2 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement