நீங்க இப்டி செய்வீங்கன்னு எதிர்பாக்கல.. விராட் கோலி மீது புஜாரா – ஹெய்டன் அதிருப்தி

Pujara
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. அதனால் 2011 போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள இந்திய அணியில் பேட்டிங் துறையில் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2/3 என சரிந்து இந்தியா தடுமாறிய போது 85 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி தம்முடைய 48வது சதமடித்தார். சொல்லப்போனால் அந்த போட்டியில் ரோகித் மற்றும் கில் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்த பின் களமிறங்கிய அவர் இந்தியாவுக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது 85 ரன்கள் இருந்தார்.

- Advertisement -

புஜாரா அதிருப்தி:
அப்போது 34* ரன்களில் இருந்த ராகுல் மேற்கொண்டு சிங்கிள் கூட எடுக்காமல் ஸ்ட்ரைக்கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் சிக்ஸருடன் சதமடித்த போதிலும் சுயநலத்துடன் விளையாடியதாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ரன்ரேட்டை வைத்து நூலிழைலையில் செமி ஃபைனல் வாய்ப்பு தீர்மானிக்கப்படும் உலகக் கோப்பையில் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் போட்டியை முன்கூட்டியே முடிக்கும் எண்ணத்துடன் விராட் கோலி விளையாடியிருக்க வேண்டும் என்று புஜாரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சதத்தை விராட் கோலி அடிப்பதற்கு நான் விரும்பியதை போலவே நீங்கள் முன்கூட்டியே போட்டியை ஃபினிஷிங் செய்வதையும் விரும்புவீர்கள். ஏனெனில் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் நீங்கள் இருக்க ரன்ரேட் வேண்டும். ரன்ரேட்டுக்காக போராடும் நீங்கள் பின்னர் அதை செய்திருக்கலாம் என்று பார்க்கும் சூழ்நிலையை சந்திக்கக் கூடாது”

- Advertisement -

“அந்த இடத்தில் தான் நீங்கள் சற்று தியாகத்தை செய்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். எப்போதுமே அணியை முதலில் பார்த்து அதற்கு தான் நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மைல்கல்லை தொட விரும்பினால் அது அணியை பாதிக்கக் கூடாது. இந்த சதம் அடுத்த போட்டியில் உங்களுக்கு சிறப்பாக விளையாட உதவும் என்பதால் இவை அனைத்தும் ஒவ்வொரு வீரர்களின் மனநிலையை பொறுத்ததாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 2 முக்கிய மாற்றங்களை செய்த ரோஹித் சர்மா – டாஸிற்கு பிறகு அதிரடி முடிவு

அதே நிகழ்ச்சியில் மேத்தியூ ஹெய்டன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சதமடிக்க தகுதியானவர் என்று நானும் ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் இது போன்ற தருணங்களில் நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும் விளையாட்டு கடவுள்கள் கெட்டவர்கள் அப்படிப்பட்டவர்களிடம் நீங்கள் ஊர்சுற்றத் தொடங்கினால் கடித்து விடுவார்கள் என்று இயன் பிஷப் அடிக்கடி சொல்வார். இருப்பினும் களத்தில் இருந்த அந்த 2 வீரர்கள் எடுத்த அந்த முடிவில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார்.

Advertisement