நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 2 முக்கிய மாற்றங்களை செய்த ரோஹித் சர்மா – டாஸிற்கு பிறகு அதிரடி முடிவு

Rohit-Toss
- Advertisement -

நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது தர்மசாலா நகரில் சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் இதுவரை தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று தலா 8 புள்ளிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து வலுவான நிலையில் உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என்பதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

ஏனெனில் கடந்த போட்டியின் போது காயமடைந்த ஹார்டிக் பாண்டியா இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்பதனால் அவருக்கு பதிலாக இடம் பிடிக்கப்போவது யார்? மற்றபடி வேறு என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. அந்த வகையில் சற்றுமுன் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

மேலும் இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய ரோஹித் சர்மா : ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவும், ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகமது ஷமியும் விளையாடுகின்றனர் என்று அறிவித்தார். அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : பேட்ஸ்மேனா மட்டுமல்ல ரோஹித் சர்மா இந்த விஷயத்திலும் கலக்குறாரு – ஆடம் கில்க்ரிஸ்ட் பாராட்டு

1) சுப்மன் கில், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) முகமது ஷமி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement