பேட்ஸ்மேனா மட்டுமல்ல ரோஹித் சர்மா இந்த விஷயத்திலும் கலக்குறாரு – ஆடம் கில்க்ரிஸ்ட் பாராட்டு

Gilchrist
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது புள்ளி பட்டியல் 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

அதனை தொடர்ந்து இந்தியா அணியானது இன்று அக்டோபர் 22-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்வதோடு மட்டுமின்றி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சரியான நேரத்தில் இந்திய அணி பார்மிக்கு வந்து ஆசிய கோப்பை தொடரை வென்ற அதே உத்வேகத்தால் தற்போது உலக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் பேசிவருகின்றனர்.

இவ்வேளையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்க்ரிஸ்ட் ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவின் பேட்டிங் மட்டுமின்றி தற்போது கேப்டன்சியும் அற்புதமாக இருக்கிறது. சரியான நேரத்தில் அவர் கேப்டன்சியில் நல்ல முதிர்ச்சி அடைந்துள்ளார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அவர் எடுக்கும் முடிவுகள் இந்த உலகக் கோப்பை தொடரில் சரியான பலனை அளித்து வருகின்றன. குறிப்பாக பவுலிங் மாற்றங்கள் முக்கிய ஓவருக்கு முன்னர் எடுக்கும் திட்டங்கள் என அனைத்தும் அவருக்கு சரியாக சென்று கொண்டிருக்கிறது. தோனி, கோலி போன்று இவரும் வெற்றிகரமான கேப்டனாக நிச்சயம் வருவார். நிறைய மக்கள் அவரின் கேப்டன்சி மீது சில கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தற்போது ஒரு கேப்டனாகவும், லீடராகவும் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

இதையும் படிங்க : கர்நாடக லெவனில் கூட விளையாட தகுதியற்ற தாக்கூருக்கு.. உ.கோ வாய்ப்பா? முன்னாள் இந்திய வீரர் விமர்சனம்

இந்த தொடரில் அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வரும் விதத்தை பார்க்கும்போது அவர் எவ்வளவு நுணுக்கமான கேப்டன் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது சில முடிவுகள் எதிரணிக்கு அழுத்தத்தையும் கொடுப்பதால் என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா கேப்டனாக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார் என ஆடம் கில்க்ரிஸ்ட் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement