கர்நாடக லெவனில் கூட விளையாட தகுதியற்ற தாக்கூருக்கு.. உ.கோ வாய்ப்பா? முன்னாள் இந்திய வீரர் விமர்சனம்

Shardul-Thakur
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அதில் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை ஆரம்பம் முதலே பிரகாசப்படுத்தி வருகிறது.

மேலும் தற்போதைய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல், குல்தீப், பும்ரா போன்றவர்களுடன் பெஞ்சில் அமர்ந்திருக்கும் இஷான் கிசான், அஸ்வின், ஷமி உட்பட பெரும்பாலான இந்திய வீரர்கள் நல்ல ஃபார்மில் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் சர்துள் மட்டும் சற்று சராசரியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது சில விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

- Advertisement -

கர்நாடக லெவனில்:
குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் எப்போதுமே பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் பந்து வீச்சில் அவ்வப்போது எதிரணி அமைக்கும் பார்ட்னர்ஷிப்பை உடைப்பராகவும் ஒரே ஓவரில் அடுத்தடுத்த விக்கெட்களை எடுத்து திருப்பு முனையை ஏற்படுத்துவதாகவும் இருந்து வருகிறார். ஆனாலும் அதற்கு நிகராக ரன்களை வாரி வழங்குவதே அவருடைய முதன்மை பிரச்சனையாக இருந்து வருகிறது.

சொல்லப்போனால் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது தான் அவரை போன்ற ஆல் ரவுண்டர்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும். ஆனால் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முதன்மை பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தாக்கூர் பந்து வீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமலேயே இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தங்களுடைய கர்நாடகா மாநில அணியின் 11 பேர் அணியில் கூட வாய்ப்பு பெறுவதற்கு தகுதியற்ற சர்துல் தாக்கூர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்துள்ளது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் தாக்கூரின் பவுலிங் மிகவும் சுமாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

Dodda Ganesh

“சர்துள் தாக்கூர் மீது மிகவும் மரியாதையுடன் சொல்கிறேன். 2023 உலகக்கோப்பை இந்திய அணியின் வாய்ப்பை விடுங்கள். இந்த தடுமாற்றமான பவுலிங்கை செயல்பாடுகளை வைத்துக்கொண்டு அவர் கர்நாடகாவின் எந்த வகையான 11 பேர் அணியில் கூட இடம் பிடிக்க போராடுவார்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள தாக்கூர் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு பெறவில்லை. இருப்பினும் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்க ஆல் ரவுண்டர் தேவை என்ற ஒரே காரணத்திற்காக அவர் வாய்ப்பு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement