IND vs BAN : செய்த தவறை ஒப்புக்கொண்ட ரோஹித் சர்மா. முதல் போட்டி முடிந்தபின் கிடைத்த தண்டனை

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று முன்தினம் டிசம்பர் நான்காம் தேதி டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 73 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து வேறுயெந்த பேட்ஸ்மேனும் 30 ரன்களை கூட அடிக்கவில்லை.

Mehidy

- Advertisement -

இதன் காரணமாக 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 46 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இருந்தது.

இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் பீல்டிங் தவறுகள், எளிதான கேட்ச்களை தவறவிட்டது, நோபல் என பல்வேறு காரணங்களால் இந்திய அணி எளிய வெற்றியை கோட்டை விட்டது. வங்கதேச அணி சார்பாக மெஹதி ஹாசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது மட்டுமின்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Mehidy Hasan

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை வீசி முடிக்காததால் போட்டியின் கட்டணத்தில் இருந்து 80 சதவீதம் தொகை இந்திய அணிக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

களத்தில் இருந்த நடுவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித்தும் அதை ஒப்புக்கொண்டதால் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா 20 சதவீதம் சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாஷிங்க்டன் சுந்தர் ஏன் அப்படி செய்ஞ்சாருன்னு எனக்கு புரியல – தினேஷ் கார்த்திக் வெளிப்படை

மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஸ்லோ ஓவர் ரெட் தவறை ஒப்புக்கொண்டதால் மேற்படி விசாரணை ஏதும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement