வாஷிங்க்டன் சுந்தர் ஏன் அப்படி செய்ஞ்சாருன்னு எனக்கு புரியல – தினேஷ் கார்த்திக் வெளிப்படை

DK
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டிசம்பர் நான்காம் தேதி டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்து 186 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணி 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INd vs Ban Shreyas Iyer Ebodad Hussain

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை இருமுறை தவறவிட்டது. குறிப்பாக 43-வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் மூன்றாவது பந்தில் மெஹதி ஹாசன் பந்தினை தூக்கி அடித்தார். அதனை கேட்ச் பிடிக்க சென்ற கே.எல் ராகுல் எளிதான கேச்சை தவறவிட்டார். இப்படி கே எல் ராகுல் எளிதான கேட்சை தவறவிட்டதும் அனைவருமே ஏமாற்றம் அடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து அடுத்த பந்தையும் மீண்டும் மெஹதி ஹசன் தூக்கி அடிக்க அந்தப் பந்து பவுண்டரி லைனில் இருந்த வாஷிங்டன் சுந்தரை நோக்கி சென்றது. ஆனால் சுந்தர் அந்த பந்தினை கேட்ச் பிடிக்க முயலாமல் பந்து கீழே விழுந்த உடன் பீல்டிங் செய்து அதனை த்ரோ செய்தார். இந்த இரண்டு விடயமும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Rohit-and-Sundar

இப்படி இந்திய அணி மோசமான பீல்டிங்கினால் தோல்வி அடைந்ததை அடுத்து கே.எல் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மீதான விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் கே.எல் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தவறவிட்ட கேட்ச் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் கூறுகையில் : வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இறுதி கட்டத்தில் கே.எல் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கேட்ச் பிடிக்காதது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

- Advertisement -

கே எல் ராகுல் கேட்சை இறுதி நேரத்தில் தவறவிட்டார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் ஏன் கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. அவர் ஏன் கேட்ச் பிடிக்க முயற்சி செய்யவில்லை என்றும் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை விளக்கு வெளிச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால் அது குறித்த சரியான விவரம் எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவை விட இவர்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சரியா இருப்பார் – மனீந்தர் சிங் கருத்து

ஆனால் பந்தை அவர் பார்த்து இருந்தால் நிச்சயம் அவர் கேட்ச் பிடிக்க வந்திருக்க வேண்டும். இதற்கு சுந்தர் தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் மொத்தமாக பீல்டிங் தரம் இன்றைய போட்டியில் குறைவாக இருந்ததாலே நாம் தோல்வியை சந்தித்தோம் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement