ஹார்டிக் பாண்டியாவை விட இவர்தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சரியா இருப்பார் – மனீந்தர் சிங் கருத்து

Maninder-Singh
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் தலைமையில் ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக வந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ஐசிசி உலக கோப்பைகளை கைப்பற்ற முடியாதது தற்போது பெரிய அளவில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை ஜெயித்த பிறகு இதுவரை எந்த ஒரு கேப்டனாலும் இந்திய அணியால் ஐசிசி நடத்தும் தொடர்களை கைப்பற்ற முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND

- Advertisement -

அதிலும் குறிப்பாக அண்மையில் நடைபெற்ற முடிந்த ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என மிகப் பெரிய இரண்டு தொடர்களை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விளையாடும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா என இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்கான அடுத்த கேப்டனுக்கான போட்டியில் வரிசையில் நிற்கின்றனர். ஆனால் பிசிசிஐ ஹார்டிக் பாண்டியாவின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட பாண்டியாவை கேப்டனாக நியமித்திருந்தது. அவரது தலைமையில் இந்திய அணியையும் அங்கு டி20 தொடரையும் கைப்பற்றியதால் பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரை எதிர்கால கேப்டனாக்க தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

Shreyas-Iyer

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மனீந்தர் சிங் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை நியமிக்கலாம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே கூறிவரும் ஒரே ஒரு விடயம் இதுதான். இந்திய அணியின் அடுத்த கேப்டனாக என்னை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயர்தான் கேப்டனாக இருப்பதில் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரிலும் சரி, மற்ற அணிகளையும் சரி அவரது கேப்டன்சியின் கீழ் நான் கவனித்துள்ளேன். அவர் ஒரு நல்ல கிரிக்கெட் சிந்தனையாளர். நேர்மறையாக போட்டிகளை எதிர் கொள்ளக் கூடியவர். அவர் பேட்டிங் அணுகுமுறையை நீங்கள் பார்த்தீர்கள் என்றாலே அதன் விளக்கம் நன்றாக தெரியும். எப்பொழுது அவர் பேட்டிங் விளையாட வந்தாலும் ரன் குவிப்பதிலேயே ஆர்வமாக இருப்பார்.

இதையும் படிங்க : IND vs BAN : போட்டி கைவிட்டுப்போன அந்த கேட்ச் மிஸ் ஆனது பற்றி பேசிய கே.எல் ராகுல் – என்ன சொன்னாரு தெரியுமா?

பவுண்டரி அடிக்க முடியவில்லை என்றாலும் முடிந்தவரை ஸ்டிரைக் ரொட்டேட் செய்வார். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய ஐயர் எதிரில் உள்ள வீரர்களையும் சரி, அணியில் உள்ள வீரர்களையும் சரி, சரியாக வேலை வாங்கும் ஒரு நபராக இருப்பார் என்பதனால் நிச்சயம் அடுத்த கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை நியமிக்கலாம் என்பதே எனது கருத்து என மனீந்தர் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement