IND vs BAN : போட்டி கைவிட்டுப்போன அந்த கேட்ச் மிஸ் ஆனது பற்றி பேசிய கே.எல் ராகுல் – என்ன சொன்னாரு தெரியுமா?

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 73 ரன்களை விளாசினார். அதனை தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வந்தது.

INd vs Ban Shreyas Iyer Ebodad Hussain

- Advertisement -

ஆனாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து சரிவினை சந்தித்த வங்கதேச அணியானது ஒரு கட்டத்தில் 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. இதன் காரணமாக இந்திய அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வங்கதேச அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹாசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் இறுதி விக்கெட்க்கு 51 ரன்கள் சேர்த்து அந்த அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போட்டியின் போது 43-வது ஓவரில் ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் மெஹதி ஹாசன் கொடுத்த ஒரு எளிய கேட்சை இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கே.எல் ராகுல் தவறவிட்டார். இந்த கேட்ச் தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

KL Rahul

ஏனெனில் கே.எல் ராகுல் அந்த கேட்சை பிடித்திருந்தால் அப்போதே இந்திய அணி கிட்டத்தட்ட 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவர் அந்த கேட்டை தவிற விடவே மெஹதி ஹாசன் அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அவர்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் விட்ட அந்த கேட்ச் குறித்து பேசிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான கேஎல் ராகுல் கூறுகையில் : இதுதான் கிரிக்கெட் எதிர்பார்க்காததையே இங்கு எதிர்பார்க்க வேண்டும். கிரிக்கெட் இருக்கும் காலம் வரை இது மாதிரியான விடயங்கள் இருக்கும். வங்கதேச அணியினர் இறுதிவரை மிகச் சிறப்பாக போராடி விளையாடினர். குறிப்பாக மெஹதி ஹாசன் மிகச் சிறப்பாக விளையாடினர் என்று கே.எல் ராகுல் கூறினார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக நெருப்பிலும் நடக்கத் தயார் – துணை கேப்டன் கேஎல் ராகுல் புதிய தெம்புடன் பேசியது என்ன

அதோடு தான் தவறவிட்ட கேட்ச்சும் இந்திய அணிக்கு தோல்விக்கான காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டார். நேற்றைய போட்டியில் ராகுல் தவறவிட்ட அந்த கேட்ச் தான் தோல்விக்கு காரணமாக இருந்தது என்று அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வேளையில் அவரும் தான் செய்தது தவறு என்று அவரது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement