இந்தியாவுக்காக நெருப்பிலும் நடக்கத் தயார் – துணை கேப்டன் கேஎல் ராகுல் புதிய தெம்புடன் பேசியது என்ன

KL-Rahul
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேசத்தின் சிறப்பான பந்து வீச்சில் 186 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ராகுல் 73 (70) ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் முதல் 40 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் தடுமாறி 136/9 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

IND vs BAn

- Advertisement -

அதனால் வெற்றி உறுதியென்று அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்திய மெஹதி ஹசன் 38* (39) ரன்கள் குவித்து வங்கதேசத்திற்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் போராடி 9 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தட்டிப்பறிக்கும் அளவுக்கு டெத் ஓவர்களில் சொதப்பி அவமான தோல்வியை சந்தித்தது. அதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே இத்தொடரை வெல்ல முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நெருப்பிலும் நடப்பேன்:

முன்னதாக வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் 4 ஆல் ரவுண்டர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் விக்கெட் கீப்பராக காலம் காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சொதப்பி வரும் ரிஷப் பண்டுக்கு பதிலாக துணை கேப்டன் கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். சமீப காலங்களாக ஓப்பனிங் இடத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி செல்ஃபிஷ் என்று ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்த ராகுல் இப்போட்டியில் திடீரென்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார்.

KL Rahul

அதில் பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் களமிறங்கி தனி ஒருவனாக 73 (70) ரன்கள் குவித்த அவர் நீண்ட நாட்கள் கழித்து விக்கெட் கீப்பிங் செய்ததால் முக்கிய நேரத்தில் தவற விட்ட கேட்ச் தவிர்த்து ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார். இந்நிலையில் இதற்கு முன் ஏற்கனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட காரணத்தால் தம்மை இப்போட்டியில் மீண்டும் அந்த வேலையை செய்யுமாறு அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக முன்னறிவிப்பின்றி கடைசி நேரத்தில் அணி நிர்வாகம் தமது வேலையை மாற்றி அமைத்ததாக தெரிவிக்கும் அவர் 2023 உலக கோப்பையை முன்னிட்டு இந்த மாற்றம் நடைபெறுவதால் தாமும் அதை மகிழ்ச்சியுடன் செய்வதாக கூறினார். அத்துடன் துணை கேப்டனாக இருப்பதால் இந்தியா வெற்றி பெறுவதற்காக நெருப்பில் நடப்பது உட்பட எந்த சூழ்நிலை இருந்தாலும் அதை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட தயார் எனக்கூறும் அவர் இது பற்றி போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “கடந்த 8 – 9 மாதங்களில் நாம் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் 2020 – 2021 காலகட்டங்களில் விக்கெட் கீப்பிங் செய்த நான் மிடில் ஆர்டரிலும் விளையாடியுள்ளேன்”

Rahul-1

“அந்த வகையில் அந்த வேலையை ஏற்கனவே நான் செய்துள்ளதால் வரும் காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதே வேலையை மீண்டும் செய்வதற்கு தயாராக இருங்கள் என்று அணி நிர்வாகம் என்னிடம் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த கடினமான பிட்ச்சில் இதர பேட்ஸ்மேன்களை விட நான் பந்தை சிறப்பான டைமிங் கொடுத்து அடித்ததாக நினைக்கிறேன். நான் அடித்த ஷாட்கள் அதிர்ஷ்டவசமாக பவுண்டரிக்கு சென்றன”

“அப்படி உங்களது அணிக்கு தேவைப்படும் இடத்தில் தேவையான சமயத்தில் நீங்கள் விளையாடிய அது போன்ற இன்னிங்ஸ் (73 ரன்கள்) ஒரு பேட்ஸ்மேனாக உங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி அடுத்து வரும் போட்டிகளில் சவாலையும் எதிர்கொண்டு உதவுகிறது. இருப்பினும் நாங்கள் 40 ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக நான் கடைசி வரை அல்லது 40 ஓவர்கள் வரை பேட்டிங் செய்திருந்தால் நாங்கள் 230 – 240 ரன்கள் எடுத்து வென்றிருப்போம்” என்று கூறினார்.

Advertisement