எந்தவொரு வீரரும் ஒருநாள் கிரிக்கெட்டில் படைக்காத சாதனையை படைத்து அசத்திய ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைவிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள ஆறு லீக் போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது ஏழாவது லீக் ஆட்டத்தில் நவம்பர் 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

உலககோப்பை தொடரில் இந்திய அணிக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் தற்போதே இந்திய அணி தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. மேலும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணியாகவும் இந்திய அணி பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தை ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோஹித் சர்மா 101 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

இந்த இன்னிங்ஸின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் படைக்காத மாபெரும் சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : ஒரே ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 பவுண்டரி மற்றும் 50 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் அடித்த 3 சிக்ஸர்களின் மூலம் இந்த ஆண்டு மட்டும் ரோஹித் சர்மா 56 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக ஏ.பி வில்லியர்ஸ் 58 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவரது சாதனையும் ரோகித் சர்மா முறியடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணியின் ஒரே வீக்னெஸ்.. ஸ்ரேயாஸை கழற்றி விட்டு அவர விளையாட வைங்க.. மிஸ்பா, வாசிம் அக்ரம் கருத்து

மேலும் இந்த ஆண்டு மட்டும் 100 பவுண்டரிகளை அடித்துள்ள இவர் ஒரே ஆண்டில் 100 பவுண்டரி மற்றும் 50 சிக்ஸர்கள் அடித்த முதல்வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த இந்திய கேப்டனாகவும் சாதனை அவர் ஐந்தாவது இந்திய வீரராக 18,000 சர்வதேச ரன்களை கடந்து அசத்தியுள்ளார். மேலும் இந்த தொடரை அவர் வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் கபில் தேவ், தோனிக்கு அடுத்து உலக கோப்பையை வென்ற கேப்டன் என்று பெருமையையும் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement