ஒழுங்கா சொல்ற இடத்துல நில்லுங்கடா.. இளம்வீரர்களை சரியான இடத்தில் நிற்க வைத்த ரோஹித் – சுவாரசிய சம்பவம்

Rohit-and-Sarfaraz
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் தோல்வியை பெற்று இந்திய அணியிடம் இந்து தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இழந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 218 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு பீல்டிங் செட் செய்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்துவீசுகையில் தேவையற்ற இடத்தில் நின்ற சர்பராஸ் கானையும், ஜெய்ஸ்வாலையும் அவர் சரியான இடத்தில் நிற்க வைத்தார்.

இதையும் படிங்க : தகுதியானவர்ன்னு பந்தை கொடுத்தேன்.. ஆனா அஸ்வின் அப்படி சொன்னதால் மறுக்க முடியல.. பின்னணியை பகிர்ந்த குல்தீப்

குறிப்பாக சர்பராஸ் கானை பேட்ஸ்மேனுக்கு இடப்புறம் ஷார்ட் லெக்கில் நிற்க வைத்த அவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் சென்று ஒரு மார்க் ஒன்றினை காலால் போட்டு இங்கேயே நிற்கும்படி இருவரையும் பீல்டிங் செட் செய்தார். இப்படி இளம் வீரர்களை சரியான இடத்தில் நிற்க சொல்லி ரோகித் செய்த இந்த சுவாரசிய சம்பவம் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement