இன்னமும் அந்த தோல்வியில் இருந்து நான் வெளிய வரல.. எனக்கு அந்த கப் ரொம்ப முக்கியம் – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய பெற்ற பின்னர் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. அதனை தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற்றதனால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் உச்சத்தில் இருந்தது.

அதே வேளையில் இந்திய அணியும் அதற்கு ஏற்றார் போல் லீக் போட்டிகளில் எல்லாம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு போட்டியில் கூட தோல்வியையே சந்திக்காமல் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் காரணமாக நிச்சயம் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து மீண்டும் இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை தவறவிட்டது. அப்படி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வியால் மிகப்பெரிய அளவில் வருத்தம் அடைந்த ரோகித் சர்மா தோல்விக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கலந்து கொள்ளவில்லை.

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் இருந்தும் விலகலாம் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தன. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் கேப்டனாக செயல்பட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முடிந்த பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : 50 ஓவர் உலககோப்பை தொடரில் அடைந்த தோல்வி குறித்து நான் தற்போது யோசிக்க விரும்பவில்லை.

- Advertisement -

ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பரிசு என்றால் அது “50 ஓவர் உலகக்கோப்பை” தான். நாங்கள் அதை பார்த்து தான் வளர்ந்தோம் எனவே இந்தியாவிற்காக அந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதுவும் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும் போது நாம் அந்த கோப்பையை கைப்பற்றி ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் அதை செய்ய முடியாமல் போனது எங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அளவில் அது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்திருக்கும்.

இதையும் படிங்க : பெரிய ஈகோவை கொண்டுள்ள அந்த இந்திய வீரரை அவுட்டாக்கி அடக்க ரெடி.. எச்சரித்த இங்கிலாந்து வீரர்

மேலும் 50 ஓவர் உலககோப்பை முக்கியம் என்பதனால் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவை முக்கியமில்லை என்று ஆகிவிடாது. ஒரு வாய்ப்பை தவறவிட்டாலும் தற்போது இன்னொரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்வரும் டி20 உலக கோப்பையை வெல்ல முயற்சிப்பேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement