அப்போ முடிவே பண்ணிட்டீங்களா.. ஒழுங்கா மாத்துங்க.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ரசிகர்கள் கொந்தளிப்பு

Star Sports
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான முழு அட்டவணை ஜனவரி 6ஆம் தேதியான நேற்று வெளியிடப்பட்டது. வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அமெரிக்காவில் துவங்கும் இத்தொடர் ஜூன் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவு பெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அதில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

ஒழுங்கா மாத்துங்க:
முன்னதாக இந்த அட்டவணை வெளியிடும் நிகழ்வை 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக தங்களுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அதன் முடிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் முக்கியமான போட்டியை பற்றிய போஸ்டரையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் தங்களுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ஆனால் அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் சாகின் அப்ரிடி ஆகியோரின் படங்கள் இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த போஸ்டரில் தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இருப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ கேப்டனாக அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

- Advertisement -

அதற்கேற்றார் போல் சமீபத்தில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மறந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காமலேயே பாண்டியாவை நீங்கள் இந்தியாவின் டி20 கேப்டனாக முடிவு செய்து விட்டீர்களா என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ரோஹித் சர்மா ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்படி இருந்த நீங்க இப்படி மாறுனது அபாரமானது.. ஓய்வு பெற்ற வார்னருக்கு லெஜெண்ட் சச்சின் பாராட்டு

மேலும் அந்த போஸ்டரில் பாண்டியாவை நீக்கி விட்டு ரோகித் சர்மாவை போட்டு புதிய பதிவை வெளியிடுங்கள் என்றும் ரசிகர்கள் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்து வருகின்றனர். முன்னதாக ரோகித் சர்மா பதவி நீக்கப்பட்டதால் மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரே நாளில் 6 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement