அந்த போஸ்டரை எடுக்கலனா பங்க்ஷனே நடக்காது.. கல்லூரி நிர்வாகத்தை அலறவிட்ட ரோஹித் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Pandya
- Advertisement -

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்க இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியுள்ள வேளையில் மினி ஏலத்திற்கு முன்பாக ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் தங்களது அணிக்கு கொண்டு வந்த மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அறிவித்தது. அப்படி ஒரு அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட விமர்சனங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் மீது இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து இன்று வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் மீதும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏற்கனவே ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் வேளையில் இன்றளவும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதோடு ரோகித் ஆதரவாகவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஹார்டிக் பாண்டியாவை வரவேற்கும் விதமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி அவரது உருவப்படத்தை மும்பை அணியின் கேப்டனாக சித்தரித்து பிரம்மாண்டமான முறையில் போஸ்டர் ஒன்றினை கல்லூரி வளாகத்தின் மீது தொங்க விட்டிருந்தது.

அதனை கவனித்த ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அந்த போஸ்டரை நீக்கினால் தான் உங்களது நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் இல்லையென்றால் நடக்காது எனவே அந்த போஸ்டரை உடனடியாக நீக்குங்கள் என கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகமும் அவர்களது இந்த கோரிக்கை காரணமாக ஹார்டிக் பாண்டியாவின் உருவப்படத்தை நீக்கி உள்ளனர்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக சில கோஷங்களையும் இட்டு அலற விட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்று விதமான வடிவங்களிலும் கேப்டனாக இருக்கும் ஒருவரை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ஒரு மாபெரும் கேப்டனை எப்படி நீங்கள் வெளியேற்ற முடியும் என ரோகித் ரசிகர்கள் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மீது எதிர்ப்பு பதிவை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 100 சிக்ஸர்கள் வருமா.. இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் இந்தயா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

இப்படி ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கும் இவ்வேளையில் தான் ஹர்திக் பாண்டியாவின் புகைப்பட போஸ்டரை வெளியேற்றிய இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement