100 சிக்ஸர்கள் வருமா.. இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் இந்தயா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் 2012க்குப்பின் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் தேவைப்படும் நேரங்களில் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாகவே விளையாட முயற்சித்த அந்த அணி ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:
மறுபுறம் அழுத்தமான நேரங்களில் நிதானமாக விளையாடிய இந்தியா தேவைப்படும் நேரங்களில் இங்கிலாந்தை புரட்டி எடுத்து அதிரடியாக விளையாடி இத்தொடரை வென்றுள்ளது. அந்த வகையில் ராஞ்சியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 11 சிக்சர்கள் அடித்தது. அதே போல இதுவரை நடந்த 4 போட்டிகளையும் சேர்த்து இந்தியா மொத்தம் 51* சிக்சர்கள் அடித்துள்ளது.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் 50 சிக்சர்கள் அடித்த முதல் அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் உலகின் வேறு எந்த அணியும் ஒரு டெஸ்ட் தொடரில் 50 சிக்ஸர்கள் அடித்ததில்லை. அந்தப் பட்டியல்:
1. இந்தியா : 51*, இங்கிலாந்துக்கு எதிராக, 2024*
2. இந்தியா : 47, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019
3. இங்கிலாந்து : 43, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023
4. ஆஸ்திரேலியா : 40, இங்கிலாந்துக்கு எதிராக, 2013/14

- Advertisement -

மேலும் இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் சேர்ந்து இதுவரை மொத்தம் 83* சிக்ஸர்கள் அடித்துள்ளன. எனவே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் ஐந்தாவது போட்டியில் 2 அணிகளும் சேர்ந்து 17 சிக்ஸர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட முதல் தொடர் என்ற உலக சாதனையை இந்தியா – இங்கிலாந்து 2024 தொடர் படைக்கும்.

இதையும் படிங்க: இங்கிலாந்து ஸ்பின்னர்களை நான் இறங்கி வந்து அடிக்க இதுதான் காரணம் – சுப்மன் கில் பேட்டி

இதைத் தொடர்ந்து இந்த தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் வென்று தொடரை உச்சமாக முடிப்பதற்கு இந்தியா தயாராகி வருகிறது. மறுபுறம் ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து கடைசி போட்டியில் வென்று 3 – 2 (5) என்ற கணக்கில் பெருமையுடன் இத்தொடரை நிறைவு செய்யப் போராட உள்ளது.

Advertisement