இங்கிலாந்து ஸ்பின்னர்களை நான் இறங்கி வந்து அடிக்க இதுதான் காரணம் – சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சி நகரில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு 192 ரன்கள் தேவை என்கிற நிலையில் இந்திய அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் 120 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக இரு அணிகளுக்கு இந்த போட்டியில் சமமான வெற்றி வாய்ப்பு இருந்தது.

- Advertisement -

இருப்பினும் அவ்வேளையில் சுப்மன் கில் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோரது இணை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை அசத்தலான வெற்றிக்கு அழைத்து சென்றனர். அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரரான சுப்மன் கில் 124 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

குறிப்பாக 40 ரன்களை கடக்கும் வரை பவுண்டரிகளையே அடிக்காமல் விளையாடிய சுப்மன் கில் இந்திய அணிக்கு 100% வெற்றி உறுதி என்று தெரிந்துதான் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அவரது இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ள வேளையில் இந்த ஆட்டத்தில் அவர் சுழற்பந்து வீச்சாளர்களை பெரும்பாலும் கிரீசில் நிற்காமல் இறங்கி வந்து விளையாடினார்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி இறங்கி வந்து ஸ்பின்னர்களை விளையாட என்ன காரணம்? என்பது குறித்து போட்டி முடிந்து பேசியிருந்த சுப்மன் கில் இது குறித்து பேசுகையில் : இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் எங்களுக்கு எதிராக கடுமையான அழுத்தத்தை அளித்தனர். மேலும் நான் இந்த தொடரில் பலமுறை இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு எதிராக LBW முறையில் ஆட்டம் இழந்தேன்.

இதையும் படிங்க : நானும் அவரோட விளையாடிருக்கேன்.. அந்த பரம்பரையில் வந்த அவருக்கு பயம் கிடையாது.. ரெய்னா பாராட்டு

எனவே இம்முறை அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கக்கூடாது என்பதற்காகத்தான் இறங்கி இறங்கி வந்து கால் நகர்வுகளை சரியாக வைத்து சுழற்பந்து வீச்சாளர்களை கையாண்டேன். இதன் காரணமாக என்னால் பந்துகளை சரியாக கணித்து அடிக்கவும் முடிந்தது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement