2023 உ.கோ முன் எதிரணிக்கு பலத்தை காட்ட விரும்பல.. அதான் அவரை ஒளிச்சு வைக்கிறோம் – ரோஹித் சர்மாவின் ப்ளான் கருத்து

Rohit Sharma Press
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. விரைவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக வழி நடத்த உள்ளார்.

மேலும் இந்த தொடரில் நட்சத்திர தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்துடன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக முதலிரண்டு போட்டிகளில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்துள்ள குல்தீப் யாதவுக்கு அளவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒளிச்சு வைக்கிறோம்:
2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக இருந்த அவர் நாளடைவில் ஃபார்மை இழந்து தடுமாறியதால் அதிரடியாக நீக்கப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார். அப்போதிலிருந்தே கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியின் கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார்.

அந்த வரிசையில் உலகக் கோப்பைக்கு முன்பாக தொடர்ந்து விளையாடி இன்னும் தம்மை மெருகேற்றுவதற்கான வேலைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியினருக்கு குல்தீப் யாதவின் முழுமையான பலம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா தம்முடைய மாஸ்டர் பிளான் பற்றி பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “குல்தீப் நல்ல பார்மில் இருக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் நாங்கள் பலவற்றை சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். குறிப்பாக ஆசிய கோப்பையில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்றவர்களுக்கு இந்த தொடரில் முழுமையான வாய்ப்பைக் கொடுக்க விரும்புகிறோம். அந்த நிலைமையில் குல்தீப் பவுலிங் பற்றி நாம் கடந்த ஒன்றை வருடமாக பார்த்து வருகிறோம்”

இதையும் படிங்க: பாவம்ங்க அவருக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. இந்திய வீரர் பற்றி.. இர்பான் பதான், உத்தப்பா பரிதாப பதிவு

“எனவே நாங்கள் அவரை அதிகமாக எதிரணிகளுக்கு காட்ட விரும்பததாலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம். அதனால் அவர் கடைசி போட்டியில் தான் விளையாட வருவார். அதற்கான காரணம் நிறைய உள்ளது. முதலிரண்டு போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுத்து கடைசி போட்டியில் விளையாட வைப்பதே எங்களை பொறுத்த வரை சிறந்த முடிவாகவும் இருக்கும். மேலும் 2 உலகக்கோப்பை பயிற்சி போட்டிகள் இருப்பதால் அதற்குள் இன்னும் அவர் தேவையான பயிற்சிகளை எடுத்துக் கொள்வார்” என்று கூறினார்.

Advertisement