பாவம்ங்க அவருக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. இந்திய வீரர் பற்றி.. இர்பான் பதான், உத்தப்பா பரிதாப பதிவு

Sanju Samson 5
- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2023 ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. விரைவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விராட் ரோகித் சர்மா போன்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆச்சரியப்படும் வகையில் தேர்வாகியுள்ளார்.

ஆனால் இந்த அணியில் கூட கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் 2015ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 2019 வரை வெறும் 1 போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற அவர் 2021 வரை எப்போதுமே நிலையான வாய்ப்புகளை பெற்றதில்லை. இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்த அவருக்கு 2022இல் கணிசமான வாய்ப்புகள் கிடைத்தது.

- Advertisement -

பாவமான சஞ்சு சாம்சன்:
அதில் முதல் முறையாக அரை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் அசத்துவேன் என்பதை நிரூபித்தார். ஆனாலும் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தை சந்தித்த போதிலும் அவருக்கு நிலையான வாய்ப்புகள் கிடைக்காமலேயே இருந்தது. அந்த நிலைமையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் அரை சதமடித்து 2 – 1 என்ற கணக்கில் வெற்றி காண்பதற்கு உதவினார்.

இருப்பினும் எதை காரணமாக வைத்து கழற்றி விடலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தேர்வு குழுவினர் டி20 தொடரில் சுமாராக செயல்பட்டதால் ஆசிய மற்றும் உலகக்கோப்பை அணிகளில் அவரை ரிசர்வ் வீரராக கூட சேர்க்கவில்லை. ஆனால் அவரைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வரும் சூரியகுமார் யாதவுக்கும் வெறும் அறிமுக போட்டியில் மட்டும் விளையாடிய திலக் வர்மாவுக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

அதனால் பெரிய ஏமாற்றத்தை சந்தித்த சஞ்சு சாம்சன் தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் ஒற்றை சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் பேசாமல் நீங்கள் வேறு நாட்டுக்கு விளையாட சென்று விடுங்கள் அவருக்கு ரசிகர்கள் பதிலளிப்பதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் “நான் சஞ்சு சாம்சனின் இடத்தில் இருந்தால் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தவனாக இருப்பேன்” என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ட்விட்டரில் பதிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அவர மாதிரி ஒரு பிளேயர் இருக்கும் வரை.. இந்தியாவை தாண்டி எதிரணியால் 2023 உ.கோ ஜெய்க்க முடியாது – மோர்கன் அதிரடி

அதே போல “சஞ்சு சாம்சனின் காலணிகளில் வேறு யாரும் இருக்கக்கூடாது” என்று மற்றொரு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ட்விட்டரில் பதிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடர்ச்சியான ஆதரவுகளால் “தாம் எங்கேயும் செல்லப்போவதில்லை இந்திய அணிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பேன்” என்று சஞ்சு சாம்சன் புதிதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement