அவர மாதிரி ஒரு பிளேயர் இருக்கும் வரை.. இந்தியாவை தாண்டி எதிரணியால் 2023 உ.கோ ஜெய்க்க முடியாது – மோர்கன் அதிரடி

Eoin Morgan
Advertisement

சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பையை வென்று ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சக்கட்டமாக காணப்படுகிறது. குறிப்பாக எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா 2011 போல இம்முறை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இருப்பினும் அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா, கருப்பு குதிரை நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற தரமான வீரர்களை கொண்டுள்ள இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்றும் சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மோர்கன் அதிரடி:
இந்நிலையில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்தக்கூடிய ஹர்திக் பாண்டியா போன்றவர் இருக்கும் போது சொந்த மண்ணில் எதிரணிகளை விட இந்தியாவுக்கே கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக 2019 உலக கோப்பையை வென்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஃபிட்டாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் பந்து வீசும் திறமை சிறப்பானது. ஆசிய கோப்பையில் குறைவாகவே பந்து வீசினாலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். இந்த உலகக் கோப்பையில் ஒரு சில அணிகளில் மட்டுமே டாப் 6 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் சில தரமான ஓவர்களை வீசக்கூடியவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் ஃபிட்டாக இருக்கும் பாண்டியா 5 – 6 தரமான ஓவர்களை வீசுவது அவர் விளையாடும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவதாக எனது கண்களுக்கு தெரிகிறது”

- Advertisement -

“குறிப்பாக எங்களுடைய இங்கிலாந்து அணியில் பழைய பென் ஸ்டோக்ஸ் விளையாடியது போல செயல்படும் திறமை அவரிடம் இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியில் க்ரீன், ஸ்டோனிய்ஸ் போன்றவர்களை விட அவர் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். 2022 டி20 உலக கோப்பையில் அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை”

இதையும் படிங்க: ஐசிசி உலக கோப்பை 2023 : ரோஹித் தலைமையில் சரித்திரம் படைக்குமா.. இந்திய அணியின் முழுமையான அலசல்

“இருப்பினும் சொந்த மண் சூழ்நிலைகளில் விளையாடுவது உங்களுக்கு ஒரு கச்சிதமான உணர்வை கொடுக்கும். ஏனெனில் நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் விளையாடுவது மற்ற அணிகளை விட அதிக சாதகத்தை கொடுக்கும். எனவே இந்தியாவில் இருக்கும் விமர்சனங்களை தடுப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் இதை ஏற்கனவே அவர்கள் செய்திருக்கின்றனர். இம்முறை அதை செய்வதற்கான திசை கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடமிருந்து வரும்” என்று கூறினார்.

Advertisement