இதெல்லாம் தேவையில்லாத ரெக்கார்டு.. தோனி மற்றும் கோலி ஆகியோருடைய மோசமான சாதனையை சமன் செய்த – ரோஹித் சர்மா

Rohit-Kohli-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 14 மாதங்களாக டி20 போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார். அந்த வகையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

- Advertisement -

இப்படி 14 மாதங்கள் கழித்து டி20 போட்டிகளுக்கான அணிக்கு திரும்பியுள்ள ரோகித் சர்மா இந்த தொடரில் தனது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இவ்வேளையில் நேற்று ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலி நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி துரத்தும் போது துவக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே வெறும் இரண்டு பந்துகளை சந்தித்து இருந்த வேலையில் ரன் அவுட் மூலம் வெளியேறியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதோடு அவர் இப்படி ரன் அவுட்டாகி வெளியேறியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோருடன் மோசமான சாதனையை பட்டியலில் முதலிடத்தை சமன் செய்துள்ளார். அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ரன் அவுட்டான வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடன் அந்த சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்தார்.

இதையும் படிங்க : வாஷிங்க்டன் சுந்தரை 19-ஆவது ஓவரை வீச அழைத்து ஏன்? போட்டி முடிந்து தெளிவான விளக்கம் கொடுத்த – ரோஹித் சர்மா

ஏற்கனவே விராட் கோலி மற்றும் தோனி ஆகியோர் 6 முறை டி20 போட்டிகளில் ரன் அவுட் ஆகியுள்ள வேளையில் நேற்று ரோகித் சர்மாவும் ஆறாவது முறையாக டி20 போட்டிகளில் ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement