அந்த விஷயத்தில் விராட் கோலியின் தகுதியில் பாதி கூட வரமாட்டார் – ரோஹித் சர்மா பற்றி பாக் வீரர் விமர்சனம்

Rohit-and-Kohli
- Advertisement -

2022 ஆசிய கோப்பையில் நடப்புச் சாம்பியனாகவும் வெற்றிகரமான அணியாகவும் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற இந்த தொடரில் கோப்பையை கோட்டைவிட்ட இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே உலக கோப்பையை வெல்லப் போகிறது என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

IND vs SL

- Advertisement -

இந்த நிலைமையில் அவரது தலைமையில் கிட்டத்தட்ட அதே அணி டி20 உலகக் கோப்பைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதால் என்ன நடக்கப்போகிறதோ என்ற கலக்கம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய ரோகித் சர்மா அப்போதைய கேப்டன் தோனியின் ஆதரவுடன் தொடக்க வீரராக களமிறங்கி குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடி சரவெடியாக செயல்பட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் போன்ற உலக சாதனைகளை அசால்டாக படைத்ததால் ஹிட்மேன் என ரசிகர்களால் போற்றப்படுகிறார்.

பிட்னெஸ் இல்ல:
மேலும் ஐபிஎல் தொடரிலும் தோனியை மிஞ்சி 5 கோப்பைகளை வென்று இந்தியாவுக்காக முழுநேர கேப்டனாக பொறுப்பேற்கும் அளவுக்கு அபார வளர்ச்சி கண்ட அவர் சமீப காலங்களில் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை குவிக்க திண்டாடுகிறார். அந்த தடுமாற்றத்திற்கு கேப்டன்ஷிப் அழுத்தம் தான் காரணம் என்று ஏற்கனவே வெளிப்படையாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் ரோஹித் சர்மா பார்முக்கு திரும்பி பெரிய ரன்களை எடுக்க வேண்டுமெனில் கேப்டன்ஷிப் பதவிகளை உதர வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த தடுமாற்றத்திற்கு அவருடைய முறையற்ற பிட்னஸ் தான் முக்கிய காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தற்போது கூறியுள்ளார். அது மட்டும் இருந்தால் அசால்ட்டாக புல் ஷாட் அடிக்கும் நுணுக்கம் உட்பட ஏராளமான திறமைகளை பெற்றுள்ள ரோகித் சர்மாவை ஏபி டீ வில்லியர்ஸ்சால் மட்டுமே நெருங்க முடியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் பிட்னெஸ்க்கு எடுத்துக்காட்டாகத் திகழும் விராட் கோலியின் பிட்னெஸில் பாதியளவு கூட ரோகித் சர்மா இல்லையென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாபர் அசாம் மற்றும் முகமத் ரிஸ்வான் ஆகியோருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு அற்புதமான நுணுக்கங்களை தெரிந்து வைத்துள்ள ரோகித் சர்மா விராட் கோலியின் உடல் தகுதியில் பாதியளவு கொண்டிருந்தால் கூட விராட் கோலியை விட அபாயகரமான பேட்ஸ்மேனாக இருப்பார். அது போன்ற நிலைமையில் அவரை ஏபி டிவில்லியர்ஸ் தவிர உலகில் வேறு யாரும் தொட முடியாது. ஆனால் அதை செய்வதை விட்டுவிட்டு ரோகித் சர்மா என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை” எனக் கூறினார்.

Butt

அவர் கூறுவது போல நிறைய நுணுக்கங்களை தெரிந்து வைத்துள்ள ரோஹித் சர்மா சமீப காலங்களில் தடுமாறுவதற்கு சுமாரான பிட்னஸ் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அது இல்லாத காரணத்தாலேயே இந்த வருடம் ஒருசில முக்கிய தொடர்களில் அவர் காயத்தால் வெளியேறினார். அதுபோக விராட் கோலியை போல் வேகமாக ஓடி ரன்கள் எடுப்பது போன்ற அம்சங்களுக்கு பிட்னெஸ் தேவைப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இப்போதும் அதில் முழுத் தேர்ச்சி பெறாத ரோகித் சர்மா ஸ்ட்ரைக்கை மாற்ற தடுமாறுவதால் அதிரடியான பவுண்டரிகளை மட்டும் விளாசி நல்ல தொடக்கத்தை பெற்று அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் திடீரென்று அவுட்டாகி விடுகிறார். எனவே நல்ல திறமை இருந்தும் பிட்னஸில் கவனம் செலுத்தாததே சமீப கால ரோகித் சர்மாவின் தடுமாற்றத்திற்கு காரணம் என்று தெரிவிக்கும் சல்மான் பட் இந்தியாவின் கேப்டனாக இருந்து கொண்டு அதை அவர் பராமரிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தெ.ஆ அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து மார்க் பவுசர் திடீர் விலகல் – காரணம் என்ன?

இருப்பினும் உடற்பயிற்சி கூடத்தில் நேரத்தை செலவிடுவதை விட களத்தில் செயல்படுவதே முக்கியம் என்று சமீபத்தில் தெரிவித்திருந்த ரோகித் சர்மா பிட்னெஸ் விட திறமையே முக்கியம் என்ற கோட்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement