தெ.ஆ அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து மார்க் பவுசர் திடீர் விலகல் – காரணம் என்ன?

Boucher
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மார்க் பவுச்சர் தனது கரியரில் நல்ல நிலையில் இருந்த போது மைதானத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வு முடிவை அறிவித்தார். அதன் பின்னர் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான பணிகளையே செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக செயல்பட துவங்கினார்.

Boucher

- Advertisement -

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக பதவி வகித்து வரும் அவரது பயிற்சியின் கீழ் தென்னாப்பிரிக்க அணியானது 11 டெஸ்ட் வெற்றிகள், 12 ஒருநாள் வெற்றிகள் மற்றும் 23 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் தலைமை பயிற்ச்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பவுச்சரின் இந்த விலகல் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் அவரது பதவி விலகல் குறித்த இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

rsa

அதன்படி தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பவுச்சர் இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியான அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செலவு செய்த நேரம் மற்றும் முயற்சி ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அவர் செய்த பணி என்பது மறக்க முடியாத ஒன்று. அவருடைய இந்த பணிக்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவராக இருக்கிறோம்.

இதையும் படிங்க : நீக்குவதற்கு முன்பாக உச்சத்திலேயே ரிட்டையர் ஆகிடுங்க – விராட் கோலிக்கு நட்சத்திர முன்னாள் பாக் வீரர் அறிவுரை

அவரது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி அவர் பயணிக்க இருக்கிறார். அதற்காக எங்களது நல்வாழ்த்துக்கள். எங்களை விட்டு பவுச்சர் பிரிவது வருத்தமாக இருந்தாலும் அவரது தனிப்பட்ட விருப்பத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கவும் விரும்புகிறோம். அவர் ஒரு ஜாம்பவான் அவரது அடுத்த கட்ட வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என தென்னாப்பிரிக்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement