நீக்குவதற்கு முன்பாக உச்சத்திலேயே ரிட்டையர் ஆகிடுங்க – விராட் கோலிக்கு நட்சத்திர முன்னாள் பாக் வீரர் அறிவுரை

Virat Kohli
- Advertisement -

ஜாம்பவான் சச்சினுக்குப் பின் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 24,000 ரன்களையும் 71 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். 10 – 20 சதங்களை அடிப்பதற்கே தடுமாறும் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் 31 வயதிலேயே 70 சதங்களை விளாசிய அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எளிதாக உடைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் 2019க்குப்பின் கேப்டன்ஷிப் அழுத்தம் மற்றும் பணிச்சுமையால் மொத்தமாக பாதிக்கப்பட்ட அவர் 3 வருடங்களாக 71வது சதத்தை அடிக்க முடியாமல் தடுமாறினார்.

Kohli

- Advertisement -

ஆனால் பகலானால் இரவு வரும் என்று இயற்கையின் நியதிக்கு விதிவிலக்காகாத விராட் கோலியை நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு அணியிலிருந்து நீக்குமாறு அதுவரை பெற்றுக் கொடுத்த வெற்றிகளை மறந்து விமர்சித்தனர். ஆனால் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களும் இது போன்ற மோசமான தருணங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்கள் என்பதையும் விராட் கோலியின் தரத்தையும் அருமையையும் உணர்ந்த ரிக்கி பாண்டிங் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சிய ஆதரவு கொடுத்தனர். மேலும் பணிச் சுமையை நிர்வகிக்க சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் ஃபார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

கிங் ரிட்டர்ன்ஸ்:
இருப்பினும் அந்த அத்தனை வெளிப்புற சதங்களையும் காதில் வாங்கிய விராட் கோலி எதற்கும் வளைந்து கொடுக்காமல் தம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் பயிற்சிகளை எடுத்து விடா முயற்சியுடன் போராடி ஒரு வழியாக 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அத்தனை விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதிலும் 1020 நாட்கள் கழித்து சதமடித்த மகிழ்ச்சியை புன்னகையுடன் கொண்டாடிய அவர் தன்னை விமர்சித்த அதே முன்னாள் வீரர்களை கைதட்டி பாராட்ட வைத்தார்.

Viart Kohli 122

அத்துடன் தன்னை டி20 அணியிலிருந்து நீக்குமாறு வெளிவந்த விமர்சனங்களைத் அடித்து நொறுக்கிய அவர் டி20 உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் முதன்மை வீரராக இடம் பிடித்து தன்னை சாம்பியன் வீரர் என்று நிரூபித்துள்ளார். இதனால் 33 வயது நிரம்பியுள்ள அவர் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக அடுத்த 5 வருடங்களுக்கு விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் வருங்காலங்களில் அணியிலிருந்து நீக்கும் அளவிற்கு மீண்டும் மோசமான தருணங்களை சந்திப்பதற்கு முன்பாக தற்போது மீண்டும் உச்சத்தை சந்தித்துள்ள விராட் கோலி விரைவில் ஓய்வு பெறுவதை பற்றி சிந்திக்குமாறு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ரிட்டையர் முடிவு:
பொதுவாக கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது ஓய்வு பெறுவதே சரியான முடிவாக இருக்கும் என வல்லுனர்கள் கூறுவார்கள். அந்த வகையில் உச்சத்தில் இருக்கும் விராட் கோலி விரைவில் ஓய்வு அறிவிக்கும் நேரம் வந்து விட்டதாக கூறும் ஷாஹித் அப்ரிடி முழுமையாக இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது சிறப்பான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Afridi

“விராட் கோலி விளையாடிய விதம் மற்றும் அவருடைய கேரியரின் தொடக்கத்திற்கு முன்பாக அவர் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கு ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினார். ஒரு சாம்பியன் கிரிக்கெட்டரான அவர் விரைவில் ஓய்வு பெறும் ஒரு நிலைமை வரும் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால் நீங்கள் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெறவேண்டும்”

“அது அணி நிர்வாகம் உங்களை அணியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்குவதற்கு முன்பாக வர வேண்டும். மேலும் நீங்கள் ஃபார்மின் உச்சத்தில் இருக்கும் போது அந்த முடிவை எடுக்க வேண்டும். இருந்தாலும் அது எப்போதாவது தான் நடக்கும். மிகவும் குறைவான வீரர்கள் குறிப்பாக ஆசியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அது போன்ற முடிவை எடுப்பார்கள். அந்த வகையில் விராட் கோலி அதை செய்யும் போது உச்சத்தில் இருக்கும்போது ஸ்டைலாக செய்வார் என்று நான் உணர்கிறேன். அனேகமாக அவர் எப்படி தனது கேரியரை தொடங்கினாரோ அதேபோல் முடிப்பார் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.

Advertisement