ரோஹித் சர்மாவை தாண்டி விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ள பாக் வீரர் பர்ஹான் – விவரம் இதோ

Sahibzada Farhan
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது போன்று பாகிஸ்தானிலும் பி.எஸ்.எல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் எட்டாவது லீக் போட்டியானது முல்தான் சுல்தான்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மென் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி சார்பாக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் சாஹிப்சாதா பர்ஹான் சதம் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை முந்தி விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரோஹித் சர்மாவை முந்தி, விராட் கோலியை சமன் செய்த : சாஹிப்சாதா பர்ஹான்

அதுகுறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் லாகூர் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெரிய இலக்கினை சேசிங் செய்யும் போது முல்தான் சுல்தான்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துவக்க வீரர் பர்ஹான் 57 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 106 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதன் காரணமாக அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது அவருக்கு கிடைத்ததோடு சேர்த்து ஒரு சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் உள்ளூர் டி20 போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து தற்போது அவர் டி20 போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா, அபிஷேக் ஷர்மா (8 சதங்கள்) ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சாக்கு போக்கு சொல்ல விரும்பல.. நாங்க எதிர்பார்த்தது நடக்கல.. தோல்வி குறித்து – ரஹானே வருத்தம்

விராட் கோலி மற்றும் ரைலி ரூஸே ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 வரலாற்றில் அதிக சதங்களை அடித்த வீரராக கிரிஸ் கெயில் 22 சதங்களுடன் முதலிடத்திலும், பாபர் அசாம் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், டேவிட் வார்னர் 10 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ள வேளையில் விராட் கோலி மற்றும் ரைலி ருஸே ஆகியோருடன் சேர்ந்து ஃபர்ஹான் நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement