சாக்கு போக்கு சொல்ல விரும்பல.. நாங்க எதிர்பார்த்தது நடக்கல.. தோல்வி குறித்து – ரஹானே வருத்தம்

Ajinkya Rahane
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் விளையாடிய கே.கே.ஆர் அணியானது 227 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய வேளையில் 161 ரன்களுக்கு சுருண்டு 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த கே.கே.ஆர் அணி சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

சொந்த மண்ணில் தோற்க இதுவே காரணம் : அஜின்க்யா ரஹானே பேட்டி

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவு 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவிக்க பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குவுடன் விளையாடிய கொல்கத்தா அணி 161 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியையும் பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே சில கருத்துக்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நாங்கள் முதல் 6 ஓவர்களில் 78 ரன்கள் வரை குவித்து நல்ல துவக்கத்தை பெற்றோம். ஆனாலும் கூடுதலாக கேமரூன் கிரீன் விக்கெட்டையும் இழந்து விட்டோம். அவரது விக்கெட்டை இழந்தது போட்டியில் பின்னடைவை தந்தது.

இதுபோன்ற பெரிய சேசிங்கில் நாம் விளையாடும் போது இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். அதேபோன்று சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் இறுதிவரை போட்டியை கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியின் போது மிடில் ஓவர்களில் எங்களது பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமையவில்லை. அதுதான் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கிறேன்.

- Advertisement -

அதேபோன்று முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆடுகளமும் நாங்கள் நினைத்ததற்கு மாறாக வித்தியாசமாக செயல்பட்டது. இரண்டாம் பாதியில் பேட்டுக்கு பந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களில் நிலைமையை உணர்ந்து ஸ்லோவர் பந்துகளை வீசி எங்களை அழுத்தத்திற்குள் தள்ளினர். இந்த தோல்வி குறித்து எந்த ஒரு சாக்கு போக்கும் நாங்கள் சொல்ல விரும்பவில்லை.

இதையும் படிங்க : கொல்கத்தா அணியை அவங்க சொந்த மைதானத்தில் வீழ்த்த இதுவே காரணம் – இஷான் கிஷன் பேட்டி

இந்த போட்டியில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் வெற்றியை நோக்கி நகர்ந்திருக்க முடியும். ஆனால் பேட்டிங்கில் எங்களது பலம் கை கொடுக்கவில்லை. இனிவரும் போட்டிகளில் பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்தும் யோசிப்போம். அடுத்த போட்டிக்கு இன்னும் 3-4 நாட்கள் இடைவெளி உள்ளதால் அடுத்த போட்டியில் மிகச்சிறப்பாக திரும்புவோம் என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement