8 வருடங்களுக்கு பின் நேர்ந்த பரிதாபம்.. ரோஹித்துக்கு எதிராக ரபாடா மிரட்டலான சாதனை.. திணறும் இந்தியா

Rohit Sharma Duck
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா திணறலாக செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா திண்டாட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் தனி ஒருவனாக போராடி 101 ரன்கள் குவித்து ஓரளவு இந்தியாவை காப்பாற்றினார். தென்னாப்பிரிக்கா சார்பில் அபாரமாக செயல்பட்ட ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

- Advertisement -

சொதப்பிய ஹிட்மேன்:
அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அதே பேட்டிங்க்கு சவாலான மைதானத்தில் இந்திய பவுலர்களின் சுமாரான பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தம்முடைய கடைசி தொடரில் விளையாடும் டீன் எல்கர் அனுபவத்தை காட்டி சதமடித்து 185 ரன்களும் மார்கோ யான்சென் 84* ரன்களும் எடுத்தனர்.

மறுபுறம் இந்தியா சார்பில் சர்துள் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்கிய நிலையில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4, முகமது சிராஜ் 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 163 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா முழுமூச்சுடன் போராடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் ரபாடா வீசிய பந்தில் முன்பை விட மோசமாக 0 ரன்களில் கிளீன் போல்ட்டான அவர் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2015க்குப்பின் 8 வருடங்கள் கழித்து முதல் முறையாக டக் அவுட்டான அவர் 2019 முதல் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் முதல் முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். அத்துடன் தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 14, 6, 0, 25, 11, 10, 10, 47, 5, 0 என வெறும் 128 ரன்களை 12.80 என்ற படுமோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் ஒரு முறை கூட அரை சதம் அடித்ததில்லை.

இதையும் படிங்க: சத்தியமா சொல்றேன் அவர் இருந்திருந்தா தெ.ஆ அணியை சாய்ச்சி இருப்பாரு – தினேஷ் கார்த்திக் கருத்து

மறுபுறம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவை டக் அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற சாதனையை ரபாடா படைத்தார். அத்துடன் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித்தை (14) அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அதை தொடர்ந்து ஜெயிஸ்வாலும் 5 ரன்களில் அவுட்டானதால் 13/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா இந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க திண்டாடி வருகிறது.

Advertisement