IND vs AUS : ஸ்டீவ் ஸ்மித் வாயாலே டிராவை அறிவிக்க வைத்த ரோஹித் சர்மா – செம பிளான் தான்

IND vs AUS Siraj SMith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று இவ்விரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. ஏற்கனவே இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணியானது இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 480 ரன்கள் குவித்தது.

IND vs AUS

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய இந்திய அணி சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரின் அற்புதமான சதம் காரணமாக 571 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் கடைசிநாள் ஆட்டத்தை இன்று துவங்கிய ஆஸ்திரேலியா அணியானது இரண்டு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தபோது டிரா செய்வதாக அறிவித்திருந்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் மற்றும் மார்னஸ் லாபுஷேன் 63 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா அணி போட்டியை டிரா செய்யும் நோக்கத்துடனே விளையாடியது. ஏனெனில் எப்படியும் இந்த போட்டியில் முன்னிலை பெற்று இந்திய அணியை வீழ்த்த முடியாது என்றும் தெரிந்து கொண்டனர்.

இதனால் போட்டியை டிராவினை நோக்கியே கொண்டு சென்ற அவர்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடினர். அப்படியே போட்டியின் கடைசி சில மணி நேரங்கள் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் பந்தை தட்டி விட்டு ரன்களை குவிக்க தொடங்கினர். இதனை கவனித்த ரோகித் சர்மா இனி முதன்மை பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி அவர்களை நோகடிப்பதை விட முதன்மை பவுலர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இரண்டாம் தர பவுலர்களான பேட்ஸ்மன்களை பந்துவீச அழைத்தார்.

- Advertisement -

அதன்படி சுப்மன் கில் முதன் முறையாக பந்து வீச வந்தார். மேலும் அடுத்ததாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா இதுவரை ஒரே ஓவர் வீசிய நிலையில் அவரது ஆசையையும் ரோஹித் நிறைவேற்றினார். அதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பந்து வீச தயாராக இருந்தனர்.

இதையும் படிங்க : வீடியோ : ஆஸ்கார் போல ஒன்றாக விருது வென்று நாட்டு நாட்டு நடனமாடிய அஷ்வின் – ஜடேஜா ஜோடி

இதனை கவனித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இதற்கு பின்னர் இந்திய அணியின் இரண்டாம் தர பவுலர்களே பந்துவீசுவார்கள் என்பதனால் இதற்கு மேல் நாம் களத்தில் இருந்தால் மரியாதையாக இருக்காது என்று நினைத்து டிராவையும் தானாக முன்வந்து ரோகித் சர்மாவிடம் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இப்படி ரோகித் சர்மா இரண்டாம் பயன்படுத்திய ஐடியா ஸ்டீவ் ஸ்மித்தை முன்கூட்டியே டிரா செய்ய முடிவெடுக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement