நீ என்ன ஹீரோவா? கவனக்குறைவால் தவறினை செய்த சர்பராஸ் கான்.. செல்லமாக அதட்டிய ரோஹித் – நடந்தது என்ன?

Rohit-and-Sarfaraz
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் செய்த தவறை சுட்டிக்காட்டி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செல்லமாக அவரை அதட்டிய ஒரு சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 307 ரன்களை குவித்து தங்களது இன்னிங்சை முடித்துக் கொண்டது. அதன் பின்னர் 46 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 145 ரன்களில் சுருண்டது.

- Advertisement -

இதன் காரணமாக 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் குவித்துள்ளதால் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியதும் அவர்களை விரைவாக வீழ்த்த வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா தொடர்ச்சியாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச வாய்ப்பினை வழங்கிக் கொண்டே இருந்தார். அதேபோன்று விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட பீல்டிங் மாற்றங்களை செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

குறிப்பாக இந்திய வீரர்களை மிகச் சிறப்பான முறையில் பீல்டிங் செட்டப் செய்ய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்டு இடங்களில் அவர் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு ஓவரின் போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனுக்கு அருகில் ஷார்ட் லெக் திசையில் சர்பராஸ் கானை நிற்க வைத்தார். ஆனால் கவனக்குறைவாக இருந்த சர்பராஸ் கான் பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் ஹெல்மெட் அணியாமல் சென்று நின்றார்.

இதையும் படிங்க : சதம் அடிக்கலைனா என்ன? 90 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய துருவ் ஜுரேலுக்கு – மற்ற வீரர்கள் அளித்த மரியாதை

அதனை கவனித்த ரோகித் சர்மா “ஹீரோ போல் நடந்து கொள்ள முயற்சிக்காதே” என்று அவரை செல்லமாக அதட்டி ஹெல்மெட் போட்டு கொண்டு நிற்கும்படி கூறினார். பின்னர் ஓய்வறையில் இருந்த வீரர் ஓடி வந்து அவருக்கு ஹெல்மெட்டை வழங்கினார். இதுபோன்று கவனக்குறைவால் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வீரர்கள் மைதானத்தில் காயமடைந்து வரும் வேளையில் அதை சரியாக கனித்து செல்லமாக அவரை அதட்டிய ரோகித் சர்மாவின் இந்த செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement