சதம் அடிக்கலைனா என்ன? 90 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய துருவ் ஜுரேலுக்கு – மற்ற வீரர்கள் அளித்த மரியாதை

Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 353 ரன்களை குவித்து ஆட்டம்மிழந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்து பரிதாபமான நிலையில் இருந்தது.

ஆனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதும் எட்டாவது விக்கெட்டுக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஆகியோரது ஜோடி 76 ரன்கள் சேர்ந்து அசத்தியது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இந்திய அணி விரைவில் ஆட்டம் இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பின் வரிசையில் பவுலர்களை எதிர்புறத்தில் நிற்க வைத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் 96 பந்துகளில் 50 ரன்களை கடந்த அவர் அதன் பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

இறுதியில் கடைசி விக்கெட்டாக 149 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் எப்படியாவது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டாம் ஹார்ட்லி வீசிய பந்தில் போல்டாகி அவர் வெளியேறினார்.

- Advertisement -

இந்த போட்டியில் என்ன தான் அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்த இந்திய அணியை இறுதியில் 307 ரன்கள் வரை அற்புதமாக அவர் வழிநடத்தி கரை சேர்த்தார் என்றே கூறலாம். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பெவிலியன் திரும்பிய அவரை அனைவரும் வரவேற்ற விதம் நெகிழவைத்தது.

இதையும் படிங்க : அவரோடதை நான் எடுத்துட்டேன்.. 4வது டெஸ்டில் இந்தியா கம்பேக் கொடுக்க உதவிய வீரரை பாராட்டிய அஸ்வின்

அந்தவகையில் இக்கட்டான சூழலில் அவர் விளையாடிய நேர்த்தியான இன்னிங்சை பாராட்டி இந்திய அணியின் வீரர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று அவரை ஓய்வறைக்கு உற்சாகமாக வரவேற்கிறார். அதோடு இந்திய அணியின் நிர்வாகிகளும் அவரை தட்டி கொடுத்து பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 40 ரன்களை குவித்துள்ள வேளையில் நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 152 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement