அவரோடதை நான் எடுத்துட்டேன்.. 4வது டெஸ்டில் இந்தியா கம்பேக் கொடுக்க உதவிய வீரரை பாராட்டிய அஸ்வின்

R Ashwin 2
- Advertisement -

பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கிய இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்கள் எடுத்தார். அதன் பின் களமிறங்கிய இந்தியா தடுமாற்றமாக பேட்டிங் செய்து 307 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 90, ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
இறுதியில் 192 என்ற இலக்கை சேசிங் செய்யும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 40/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோஹித் 24*, ஜெய்ஸ்வால் 16* ரன்களுடன் விளையாடும் இந்திய அணிக்கு இன்னும் 152* ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் முக்கிய நேரத்தில் ஜுரேலுடன் சேர்ந்து 28 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் பந்து வீச்சில் 4 விக்கெட்கள் எடுத்த குல்தீப் யாதவ் இந்தியா கம்பேக் கொடுப்பதற்கு முக்கிய பங்காற்றியதாக அஸ்வின் பாராட்டியுள்ளார்.

மேலும் 2வது இன்னிங்ஸில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 விக்கெட்டை நான் எடுத்து விட்டேன் என்று அவரிடம் சொன்னதாகவும் தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தகுந்த இடத்திற்கு பதிலாக நாங்கள் நேற்று குல்தீப்பை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பியது கடினமானதாகும். இருப்பினும் நல்ல தடுப்பட்டம் பொறுமையை காட்டிய அவரும் ஜுரேலும் எங்களுடைய உடை மாற்றும் அறையை அமைதியாக வைத்திருந்தனர்”

- Advertisement -

“குறிப்பாக இரண்டாவது போட்டியில் விளையாடும் ஜுரேல் குருட்டுத்தனமாக அடிக்காமல் தன்னுடைய திட்டத்தை பின்பற்றி விளையாடியது எங்களுக்கு பெரிய ஊக்கத்தை கொடுத்தது. குல்தீப் அபாரமாக பந்து வீசினார் என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய ரன் அப்பில் வேலை செய்து வேகத்தை மாற்றி பந்து வீசுவது எனக்கு பிடித்துள்ளது. அவர் தற்போது 2 பவுலரை போல் செயல்படுகிறார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் குல்தீப் யாதவை பார்த்து கத்துக்கனும் – பாராட்டுகளை தெரிவித்த ரசிகர்கள்

“அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். அவரிடம் உங்களுடைய 5 விக்கெட்களை நான் எடுத்து விட்டதாக சொன்னேன். அதற்கு அவர் தகுதியானவர். பேட்டிங்கிலும் அவர் எங்களுடைய உடைமாற்று அறை பதறாமல் இருப்பதற்கு முக்கிய பங்காற்றினார். ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இதே துவக்கத்தை நாளையும் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். இந்திய அணியில் நான் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்கிறேன்” என்று கூறினார்.

Advertisement