டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் குல்தீப் யாதவை பார்த்து கத்துக்கனும் – பாராட்டுகளை தெரிவித்த ரசிகர்கள்

Kuldeep
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் குவித்துள்ள வேளையில் நாளைய நான்காவது நாள் ஆட்டத்தின் போது மேலும் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு தற்போது பிரகாசமாகியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்தியா அணியானது ஒரு கட்டத்தில் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்ததால் 250 ரன்களுக்குள் ஆட்டமிழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரது இணை மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எட்டாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அவர்களது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவின் பேட்டிங் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஏனெனில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்த போட்டியில் 100 பந்துகளுக்கு மேல் சந்தித்த வேளையில் குல்தீப் யாதவும் அவர்களுக்கு இணையாக 130 பந்துகளுக்கு மேல் சந்தித்தார்.

- Advertisement -

மற்ற வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், ரஜத் பட்டிதார், ஜடேஜா சர்பாஸ் கான் என யாருமே பெரிய அளவில் பந்துகளை எதிர்கொள்ளவில்லை. ஆனால் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 131 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் காட்டினார்.

இதையும் படிங்க : 32 போட்டிகள் 29 தோல்வி 3 ட்ரா.. பரபரக்கும் 4வது டெஸ்டில் வரலாறு மாறுமா? 100% வெற்றியை இந்தியா சாதிக்குமா?

அதிலும் குறிப்பாக ஆண்டர்சன், ராபின்சன், டாம் ஹார்ட்லி மற்றும் பஷீர் ஆகியோர் மாறி மாறி பந்துவீசியும் அவரை விரைவில் ஆட்டமிழக்க வைக்க முடியவில்லை. இறுதியில் 131 பந்துகளை சந்தித்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரது இந்த பேட்டிங்கை பாராட்டியுள்ள ரசிகர்கள் முன்னணி பேட்ஸ்மேன்கள் கூட 100 பந்துகளை சந்திக்காத வேளையில் குல்தீப் யாதவ் விளையாடிய விதத்தை பார்த்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது இந்த இன்னிங்சை பாராட்டி வருகின்றனர்.

Advertisement