32 போட்டிகள் 29 தோல்வி 3 ட்ரா.. பரபரக்கும் 4வது டெஸ்டில் வரலாறு மாறுமா? 100% வெற்றியை இந்தியா சாதிக்குமா?

IND vs ENG 4 Day 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் 122*, ஓலி ராபின்சன் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 353 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 4 மற்றும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்களை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, கில், ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 177/7 என சரிந்த இந்தியா 300 ரன்கள் தாண்டாது என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அப்போது துருவ் ஜுரேல் 90, குல்தீப் யாதவ் 28 ரன்களும் அடித்து காப்பாற்றினர்.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:
அதனால் தப்பிய இந்தியா 307 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்களை எடுத்தனர். அதன் பின் 46 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் தரமான பந்து வீச்சு தாக்கு பிடிக்க முடியாமல் 145 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு பென் டக்கெட் 15, ஓலி போப் 0, ஜோ ரூட் 11, பென் ஸ்டோக்ஸ் 4, பென் ஃபோக்ஸ் 17 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60, ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை எடுத்தனர். இறுதியில் 192 என்ற இலக்கை துரத்தும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 40/0 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 24*, ஜெய்ஸ்வால் 16* ரன்கள் எடுத்துள்ளனர். தற்போது இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றிக்கு 152 ரன்கள் தேவைப்படும் இந்தியாவிடம் 10 விக்கெட்டுகள் கைவசம் இருக்கிறது. எனவே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 99% பிரகாசமாக உள்ளது என்றே சொல்லலாம். ஆனாலும் 4வது நாளில் ராஞ்சி பிட்ச் இன்னும் அதிகமாக சுழலுக்கு சாதகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதும் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டால் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: 145க்கு ஆல் அவுட்.. ஒரே நாளில் இங்கிலாந்தை தலைகீழாக சரித்த அஸ்வின், குல்தீப்.. இந்தியாவுக்கு சவாலான இலக்கு?

ஆனால் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் எந்த வெளிநாட்டு அணியும் 200க்கும் குறைவான இலக்கை கட்டுப்படுத்தி வென்றதில்லை. இதற்கு முன் வரலாற்றில் இந்திய மண்ணில் 200க்கும் குறைவான இலக்கை கட்டுப்படுத்த முயற்சித்த 32 டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு அணிகள் 29 தோல்விகளையும் ட்ராவை சந்தித்ததே தவிர வெற்றி பெற்றதில்லை. எனவே நாளை இங்கிலாந்து அந்த வரலாற்றை மாற்றுமா அல்லது இந்தியா வென்று 100% வெற்றி சரித்திரத்தை தக்க வைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement