145க்கு ஆல் அவுட்.. ஒரே நாளில் இங்கிலாந்தை தலைகீழாக சரித்த அஸ்வின், குல்தீப்.. இந்தியாவுக்கு சவாலான இலக்கு?

Ashwin 22
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றமாக விளையாடி 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, கில், ரஜத் படிடார் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் அடித்தும் 177/7 என இந்தியா தடுமாறியது.

- Advertisement -

அதன் காரணமாக 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் நங்கூரமாக விளையாடிய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல் 90 ரன்களும், குல்தீப் யாதவ் 28 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட்டை 15 ரன்களில் அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்ததாக வந்த ஓலி போப்பை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காமல் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட்டையும் 11 ரன்களில் காலி செய்த அஸ்வின் போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அதைப் பயன்படுத்திய குல்தீப் யாதவ் மறுபுறம் 60 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லியை அவுட்டாக்கி அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை 4 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதே வேகத்தில் ஜானி பேர்ஸ்டோ 30, பென் ஃபோக்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அடுத்து வந்த வீரர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா மிகவும் வேகமாக இங்கிலாந்தை 145 ரன்களுக்கு சுருட்டியது. இந்தியா சார்பில் அதிகப்பட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை எடுத்தனர். இப்போட்டியில் முதல் இரண்டு நாட்களில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இதையும் படிங்க: என்னாங்க பித்தலாட்டம் இது? அஸ்வின் எடுத்த ஜோ ரூட் விக்கெட் பற்றி மைக்கேல் வாகன் கேள்வி

ஆனால் மூன்றாவது நாளில் துருவ் ஜூரேல் அபாரமான ஆட்டத்தால் தப்பிய இந்தியா பந்து வீச்சில் அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோரின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்தை 145 ரன்களுக்கு சுருட்டி போட்டியை தலைகீழாக மாற்றியது. இருப்பினும் ராஞ்சி பிட்ச் இன்னும் பேட்டிங்க்கு சவாலாக மாறும் என்பதால் இங்கிலாந்து நிர்ணயித்துள்ள 192 ரன்கள் என்பதே சவாலானதாக பார்க்கப்படுகிறது. எனவே இந்தியா பொறுப்புடன் விளையாடினால் எளிதாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement