என்னாங்க பித்தலாட்டம் இது? அஸ்வின் எடுத்த ஜோ ரூட் விக்கெட் பற்றி மைக்கேல் வாகன் கேள்வி

Micheal Vaughan 6
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நான்காவது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொல்லப்போனால் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தும் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 177/7 என தடுமாறிய இந்தியா 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அபாரமாக விளையாடிய துருவ் ஜுரேல் 90, குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

என்னாங்க பித்தலாட்டம்:
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட்டை 15 ரன்களில் அவுட்டாக்கிய அஸ்வின் அடுத்ததாக வந்த ஓலி போப்பை கோல்டன் டக் அவுட்டாக்கி அதற்கடுத்ததாக வந்த ஜோ ரூட்டை 11 ரன்களில் காலி செய்தார்.

அதேபோல மறுபுறம் 60 ரன்கள் அடித்து மிகப்பெரிய சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லியை போல்ட்டாக்கிய குல்தீப் யாதவ் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 4 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். அதனால் 3வது நாள் தேனீர் இடைவேளையில் 120/5 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 2வது இன்னிங்ஸில் ஜோ ரூட்டுக்கு எல்பிடபிள்யூ முறையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மேலும் சந்தேகத்தை தீர்க்க அதை மீண்டும் ஒளிபரப்பு செய்யாத ஒளிபரப்பு நிறுவனம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாகவும் மறைமுகமாக விமர்சிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த டெக்னாலஜி ஆச்சரியத்தை கொடுக்கிறது. பந்தின் பாதி பகுதி அவுட் சைட் லெக் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே இருக்கிறது. ஆனாலும் அது முழுமையாக ஸ்டம்பில் அடிப்பது போல் சிவப்பு நிறத்தில் காட்டப்படுகிறது”

இதையும் படிங்க: ரூட்டை காலி செய்த அஸ்வின்.. கும்ப்ளேவை முந்தி இந்திய மண்ணின் மைந்தனாக மாபெரும் வரலாற்று சாதனை

“இந்த தொடர் முழுவதுமே ஹாக்-ஐ டெக்னாலஜி சுமாராக இருக்கிறது. அது தற்போது இங்கிலாந்தின் சிறந்த வீரர் ரூட்டுக்கு எதிராக வேலை செய்துள்ளது. ஜோ ரூட் அவுட்டை பற்றிய ரீப்ளே நமக்கு ஏன் அதிகமாக காட்டப்படவில்லை என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். கண்டிப்பாக அது இந்த இன்னிங்ஸின் முக்கிய தருணமாகும். நாம் அதை அதிகமாக பார்க்க வேண்டும். இதை நண்பருக்காக கேட்கிறேன்” என்று “என்னாங்க பித்தலாட்டம் இது” என்ற வகையில் பதிவிட்டுள்ளார்.

Advertisement