36 வயதில் அசத்திய ரோஹித் சர்மா.. விஜய் ஹசாரேவின் 73 வருட சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை

Rohit Sharma Vijay Hazare
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. இதுவரை நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. எனவே சமனில் இருக்கும் இந்த தொடரில் முன்னிலை பெறும் முனைப்புடன் இப்போட்டியில் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 10, சுப்மன் கில் 0, ரஜத் படிடார் 5 என மூன்று முக்கிய இளம் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 33/3 என தடுமாறிய இந்திய அணியை மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக விளையாடி மீட்டெடுக்க முயற்சித்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:
அதற்கு அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா சொந்த ஊரில் மெதுவாக விளையாடி கை கொடுத்தார். அதை பயன்படுத்தி ரோகித் சர்மா கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டார். நேரம் செல்ல செல்ல இங்கிலாந்து பவுலர்களை நாலாபுறமும் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 11வது சதத்தை விளாசினார்.

குறிப்பாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஒரு அரை சதம் கூட இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய அவர் விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்கள் சொதப்பிய போது கேப்டனாக முன்னின்று பொறுப்புடன் செயல்பட்ட ரோகித் சர்மா 36 வயதில் சதமடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிக வயதில் சதமடித்த இந்திய கேப்டன் என்ற விஜய் ஹசாரேவின் 73 வருட சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 1951ஆம் ஆண்டு விஜய் ஹசாரே இதே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்தியாவின் கேப்டனாக 36 வருடம் 278 நாட்களில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். தற்போது 36 வருடம் 291 நாட்கள் வயதில் சதமடித்துள்ள ரோகித் சர்மா அவருடைய சாதனையை உடைத்துள்ளார். அந்த வகையில் இக்கட்டான நேரத்தில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவின் ஆட்டத்தால் 33/3 என தடுமாறிய இந்தியா தற்போது 200 ரன்கள் தாண்டி போட்டியில் விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: நீ போயி ரஞ்சி மேட்ச்ல விளையாடு.. 3 ஆவது போட்டி ஆரம்பித்ததும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட – இந்திய வீரர்

அவருக்கு கை கொடுக்கும் ரவீந்திர ஜடேஜாவும் தன்னுடைய சொந்த ஊரில் அரை சதமடித்து பொறுப்பான வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சற்று முன் வரை ரவீந்திர ஜடேஜா 70* ரன்கள் ரோகித் சர்மா 112* ரன்கள் எடுத்து இப்போட்டியில் இந்தியாவை வலுப்படுத்த போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement