நீ போயி ரஞ்சி மேட்ச்ல விளையாடு.. 3 ஆவது போட்டி ஆரம்பித்ததும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட – இந்திய வீரர்

Mukesh
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி இன்று காலை ராஜ்கோட் நகரில் துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டு புது வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு உட்பட இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் முகமது சிராஜ் இணைந்துள்ளார். இதன் காரணமாக தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடாத முகேஷ் குமாரை இந்திய அணியின் நிர்வாகம் இன்று காலை அணியில் இருந்து விடுவித்து பெங்கால் அணிக்கு சென்று ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏனெனில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்து அடுத்த நான்காவது டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு இன்னும் பல நாட்கள் இடைவெளி இருக்கும் வேளையில் பீகார் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ரஞ்சி போட்டியில் பெங்கால் அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட முகேஷ் குமாரை நேரடியாக பெங்கால் அணியில் இணைந்து ரஞ்சி போட்டியில் விளையாடுமாறு அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்தி அணியில் விளையாடும் வீரர்களில் பெரும்பாலானோர் ரஞ்சி கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : முக்கிய நேரத்தில் கை கொடுத்த ஹிட்மேன்.. தல தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்து மாஸ் சாதனை

ஆனால் அதனை மாற்றும் வகையில் தற்போது அணியில் விளையாடாமல் இருக்கும் வீரர்களை தேவைப்படும் போது ரஞ்சி போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தான் முகேஷ் குமார் இன்று காலை இந்திய அணியில் இருந்து வெளியேறி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement