முக்கிய நேரத்தில் கை கொடுத்த ஹிட்மேன்.. தல தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்து மாஸ் சாதனை

Rohit Sharma MS Dhoni
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்றது. அந்த நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ்கோட் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் துருவ் ஜுரேல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினார்கள். அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வாலை 10 ரன்னில் அவுட்டாக்கிய மார்க் வுட் அடுத்ததாக வந்த சுப்மன் கில்லை டக் அவுட்டாக்கினார். அதற்கடுத்ததாக வந்த ரஜத் படிதார் 5 ரன்களில் டாம் ஹார்ட்லி சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அதனால் 33/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். அந்த நிலையில் வந்த ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா நிதானமாக விளையாடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தார். குறிப்பாக இந்த தொடரில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தி விமர்சனங்களை சந்தித்த இம்முறை கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் நேரம் செல்ல செல்ல 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை தூக்கிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்தனர். அதில் முதலாவதாக அரை சதம் கடந்து இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு கை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா முதல் நாள் தேநீர் இடைவெளியில் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 97* ரன்கள் குவித்து சதத்தை நெருங்கியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த இரண்டு சிக்ஸரையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. வீரேந்திர சேவாக் : 90
2. ரோகித் சர்மா : 79*
3. எம்.எஸ். தோனி : 78
4. சச்சின் டெண்டுல்கர் : 69
5. ரவீந்திர ஜடேஜா/கபில் தேவ் : தலா 61

இதையும் படிங்க: முக்கிய நேரத்தில் கை கொடுத்த ஹிட்மேன்.. தல தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்து மாஸ் சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் (211) அடித்த இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் (212* சிக்ஸர்கள்) புதிய வரலாறு படைத்துள்ளார். அவருடைய நேர்த்தியான ஆட்டத்தால் முதல் நாள் தேநீர் இடைவெளியில் இந்தியா 185/3 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மாவுடன் ரவீந்திர ஜடேஜா 68* ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Advertisement