15 வருஷமா நாட்டுகாக விளையாடும்.. விராட் கோலி அப்படிப்பட்ட பிளேயர் கிடையாது.. ஜெய் ஷா கருத்து

Jay Shah 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் சொந்த காரணங்களுக்காக வெளியேறிய அவர் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடுவார் என்று நம்பப்பட்டது.

ஆனால் தற்போது கடைசி மூன்று போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகும் அமைந்துள்ளது. சொல்லப்போனால் கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி தன்னுடைய 13 வருட கேரியரில் இப்படி ஒரு முழுமையான டெஸ்ட் தொடரில் எப்போதுமே விளையாடாமல் விலகியதில்லை.

- Advertisement -

ஜெய் ஷா ஆதரவு:
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கக்கூடிய அவர் தற்போது 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரிலிருந்து விலகியுள்ளார் என்றால் ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் அவருக்கு பென் ஸ்டோக்ஸ் முதல் ரோகித் சர்மா வரை அனைத்து தரப்பினரும் தேவையான ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக இந்தியாவுக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் விராட் கோலி தேவையின்றி லீவ் எடுப்பவர் கிடையாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். எனவே தற்போது விடுப்பு எடுப்பதற்கு உரிமையை கொண்டுள்ள விராட் கோலிக்கு தாங்கள் தேவையான ஆதரவு கொடுக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த 15 வருடங்களில் முதல் முறையாக ஒருவர் சொந்த காரணங்களுக்காக விடுப்பு கேட்கிறார் என்றால் அதற்கான முழு உரிமையும் அவருக்கு உள்ளது. பொதுவாக விராட் கோலி நியாயமான காரணம் இல்லாமல் விடுப்பு கேட்கக்கூடிய வீரர் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். எனவே நாங்கள் எங்களுடைய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுக்க வேண்டும். மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவது பற்றி விராட் கோலியிடம் நாங்கள் பின்னர் பேசுவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 3 விக்கெட் விழுந்ததும் உள்ளே வந்த ஜடேஜா.. பேட்டிங் வரிசையில் கொடுக்கப்பட்ட ப்ரமோஷன் – காரணம் என்ன?

இதற்கிடையே தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறப்பதாலேயே விராட் கோலி இங்கிலாந்து தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்த ஏபி டீ வில்லியர்ஸ் பின்னர் அந்த கருத்தை வாபஸ் பெற்றார். இந்த நிலையில் ராஜ்கோட் நகரில் துவங்கியுள்ள மூன்றாவது போட்டியில் இந்தியா விராட் கோலி இல்லாமல் விளையாடி வருகிறது. குறிப்பாக 1 – 1* கணக்கில் சமனில் இருக்கும் அந்தத் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி முன்னிலை பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

Advertisement