கங்குலியின் 20 வருட மாஸ் சாதனை தகர்ப்பு.. ஆசிய கண்டத்தில் முதல் வீரராக ரோஹித் சர்மா வரலாற்று சாதனை

- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 5 போட்டிகளிலும் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 274 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 103, ரச்சின் ரவீந்தரா 75 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 46, கில் 26 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் விராட் கோலி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 32, ராகுல் 27, ரவீந்திர ஜடேஜா 39* ரன்கள் எடுத்ததால் 48 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்தது. அதனால் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் என்பதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியில் கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 46 (40) ரன்கள் விளாசி மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்து முக்கிய பங்காற்றினார். அதிலும் குறிப்பாக புதிய பந்தய ஸ்விங் செய்து மிரட்டக்கூடிய ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்ரி போன்ற நியூசிலாந்து பவுலர்களை ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிர்கொண்டு 4 பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சேசிங் செய்வதற்கு நல்ல அடித்தளத்தை கொடுத்தார்.

- Advertisement -

அதை விட இந்த உலகக் கோப்பையில் இதுவரை 17 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோகித் சர்மா உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சௌரவ் கங்குலியின் 20 வருட மாஸ் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2003 உலகக்கோப்பையில் கங்குலி 15 சிக்சர்கள் அடித்து இருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 17* (2023)
2. சவுரவ் கங்குலி : 15 (2003)
3. ரோஹித் சர்மா : 14 (2019)
4. நவ்ஜோத் சித்து : 10 (1987)
5. ரோகித் சர்மா/ஷிகர் தவான் : தலா 9 (2015)

இதையும் படிங்க: கிங் கோலி ஹிட்மேன் ரோஹித் எஃபெக்ட்.. உ.கோ வரலாற்றில் சேசிங்கில் இந்தியாவ தனித்துவ உலக சாதனை

அது போக இந்த வருடம் களமிறங்கிய ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ரோகித் சர்மா 51 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற மாபெரும் சாதனையும் ரோஹித் படித்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஏபி டீ வில்லியர்ஸ் : 58 (2015)
2. கிறிஸ் கெயில் : 56 (2019)
3. ரோஹித் சர்மா : 51* (2023)
3. சாகித் அப்ரிடி : 48 (2002)

Advertisement