கிங் கோலி ஹிட்மேன் ரோஹித் எஃபெக்ட்.. உ.கோ வரலாற்றில் சேசிங்கில் இந்தியாவ தனித்துவ உலக சாதனை

Irfan Pathan Tweet 2
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 274 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 103, ரச்சின் ரவீந்தரா 75 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 46, கில் 26 ரன்கள் அடித்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் அடுத்ததாக வந்த விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சேசிங்கில் சாதனை:
அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 33, ராகுல் 27, ஜடேஜா 39* ரன்கள் எடுத்ததால் 48 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த இந்தியா ஐசிசி தொடர்களில் 20 வருடங்களாக நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தியது. அதன் காரணமாக நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் இத்தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது.

முன்னதாக இந்த உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் இந்தியா சேசிங் செய்தே 5 வெற்றிகளையும் பதிவு செய்து அசத்தி வருகிறது. பொதுவாகவே சாதாரண இருதரப்பு தொடர் முதல் உலகக்கோப்பை வரை சேசிங் செய்வது அழுத்தமானதாகவும் சவாலானதாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு சில விக்கெட்டுகள் விழுந்தால் கூட உடனடியாக நன்றி அதிகரித்து சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

ஆனாலும் அதை இத்தொடரில் வெற்றிகரமாக செய்து வரும் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 273/2 ரன்களையும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 261/3 ரன்களையும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 274/6 ரன்களையும் சேசிங் செய்து முறையே 8, 7, 4 வித்தியாசத்தில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 3 முறை 250க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனை இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: உலகக்கோப்பை போட்டிகளில் சங்கக்காரா, சாகிப் அல் ஹசன் ஆகியோரது சாதனையை சமன் செய்த – விராட் கோலி

இதற்கு முன் வேறு எந்த அணியும் இப்படி ஒரே உலகக் கோப்பையில் 3 முறை 250+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. இதற்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே கொடுத்த அதிரடியான துவக்கமும் அதை அப்படியே மிடில் ஆர்டரில் விராட் கோலி சேசிங் செய்து கொடுத்ததே முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

Advertisement