IND vs WI : ஷாஹித் அப்ரிடியை முந்தி ஆசிய கிங்காக ஹிட்மேன் ரோஹித் படைத்த 5 சாதனைகள் இதோ

ROhit Sharma Shahid Afridi
- Advertisement -

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதியான நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்தியா பங்கேற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்திய நேரப்படி இரவு 8.45 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியான 53 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் ரோகித் சர்மா 33 (16) ரன்களில் அவுட்டானார்.

Rishabh Pant 44

- Advertisement -

அடுத்த ஓவரிலேயே அவருடன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (14) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தீபக் ஹூடா 2 பவுண்டரியுடன் 21 (19) ரன்களிலும் அவருடன் பொறுப்புடன் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 6 பவுண்டரியுடன் 44 (31) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அந்த சமயத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 6 (9) ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் 2 பவுண்டரி 1 சிக்சருடன் சஞ்சு சாம்சன் 30* (23) ரன்களும் கடைசி நேரத்தில் களமிறங்கி 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்கவிட்ட அக்சர் படேல் 20* (8) ரன்களும் எடுத்தனர்.

இந்தியா வெற்றி:
அதனால் 20 ஓவர்களில் இந்தியா 191/5 ரன்கள் எடுத்த நிலையில் சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 192 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் பிரண்டன் கிங் 13 (8) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தேவோன் தாமஸ் 1 (4) ரன்னில் நடையை கட்டினார். அதனால் 22/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற தனது அணிக்கு 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுப்பின்றி 24 (8) ரன்களில் ரன் அவுட்டானார்.

IND vs WI T20I

அந்த நிலைமையில் மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 14 (16), ரோவ்மன் போவல் 24 (16), ஜேசன் ஹோல்டர் 13 (9), சிம்ரோன் ஹெட்மையர் 19 (19) என முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 19.1 ஓவரில் 132 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது. பந்துவீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ஆசியாவின் கிங்:
இப்போட்டியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்டு பங்காற்றிய நிலையில் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா வெறும் 16 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 33 ரன்களை 206.25 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு இந்தியாவுக்கு சூப்பர் தொடக்கம் கொடுத்தார். குறிப்பாக 3 சிக்சரை விளாசிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட்+ஒருநாள்+டி20) அதிக சிக்சர்களை அடித்த ஆசிய வீரர் என்ற பாகிஸ்தானின் சாகித் அப்ரிடியை முந்தி புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார்.

Rohit Sharma Six

இப்படி ஆசியாவின் சிக்ஸர் கிங்காக சாதித்துள்ள ரோகித் சர்மாவுக்கு முதலிடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லை முந்துவதற்கு 57 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுவதால் ஓய்வு பெறுவதற்குள் அந்த உலக சாதனையும் உடைப்பார் என்று நம்பலாம். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில் : 553 (551 இன்னிங்ஸ்)
2. ரோஹித் சர்மா : 477* (427 இன்னிங்ஸ்)
3. ஷாஹித் அப்ரிடி : 476 (508 இன்னிங்ஸ்)
4. பிரண்டன் மெக்கலம் : 398 (474 இன்னிங்ஸ்)
5. மார்ட்டின் கப்டில் : 379 (393 இன்னிங்ஸ்)

- Advertisement -

அதுபோக சர்வதேச கிரிக்கெட்டில் 16000 ரன்களை குவிக்கும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 34357
2. ராகுல் டிராவிட் : 24208
3. விராட் கோலி : 23726*
4. சௌரவ் கங்குலி : 18575
5. எம்எஸ் தோனி : 17266
6. வீரேந்திர சேவாக் : 17253
7. ரோகித் சர்மா : 16000*

Rohith

மேலும் வெளிநாடுகளில் இந்தியா வென்ற போட்டிகளில் அதிக முறை இடம் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 102*
2. எம்எஸ் தோனி : 101
3. விராட் கோலி : 97

- Advertisement -

அதுபோக கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் (9, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) என்ற எம்எஸ் தோனியின் (9, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சாதனையையும் சமன் செய்தார்.

Rohith

மேலும் கடைசியாக அவர் தலைமையில் இந்தியா பங்கேற்ற 9 டி20 தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக டி20 தொடரை வென்ற இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் (தலா 9 தொடர்கள்) சமன் செய்தார்.

இதையும் படிங்க : இங்கிலாந்தை பழிதீர்த்த கையோடு ஆஸியை சாய்த்து தங்கத்தை வெல்லுமா இந்தியா – புள்ளிவிவரம் இதோ

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை எடுத்த முதல் ஆசிய தொடக்க வீரர் என்ற பெருமையும் பெற்றார். அந்தப் பட்டியல்:
1. மார்டின் கப்தில் : 3119
2. ரோகித் சர்மா : 3006*
3. பால் ஸ்டிர்லிங் : 2863

Advertisement