இங்கிலாந்தை பழிதீர்த்த கையோடு ஆஸியை சாய்த்து தங்கத்தை வெல்லுமா இந்தியா – புள்ளிவிவரம் இதோ

Women's World Cup 2022
- Advertisement -

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற காமன்வெல்த் 2022 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தின. ஜூலை 29 முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் சுற்று போட்டிகளின் முடிவில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

IND vs Pak Common Wealth Games Womens

- Advertisement -

அதை தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதியான நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வலுவான இங்கிலாந்தை சந்தித்த இந்தியா முதலில் பேட்டிங் செய்து 164/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 61 (32) ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்கஸ் 44* (31) ரன்களும் எடுத்தனர். அதன்பின் 165 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு டேனியல் வைட் 35, கேப்டன் நட் ஸ்கீவர் 41 (43), எமி ஜோன்ஸ் 31 (24) என முக்கிய வீராங்கனைகள் நல்ல ரன்களை எடுத்தாலும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள்.

பைனலில் இந்தியா:
அதனால் ஸ்னே ராணா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது இங்கிலாந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்த காரணத்தால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. அதேபோல் நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு இறுதி போட்டியில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

INDW vs ENGW Commonwealth Womens Smriti Mandhana Deepti Sharma

இதை தொடர்ந்து இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மாபெரும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு பர்மிங்காமில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக காமன்வெல்த் கிரிக்கெட்டில் களமிறங்கிய ஹர்மன்பிரீட் கௌர் தலைமையில் முதல் முயற்சியிலேயே அட்டகாசமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் தங்கப்பதக்கத்தை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

காலம் காலமான வேதனை:
இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் காலம் காலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்ற 2 பெரிய வலுவான அணிகளிடம் பெற்ற வரலாற்று தோல்விகளால் ஏற்பட்ட ஆறாத வலிக்கும் வேதனைக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய காலமும் கட்டாயமும் பொன்னான வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ஆம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி 1983இல் கபில்தேவ் தலைமையில் வலுவான வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து முதல் உலகக்கோப்பையை வென்றாலும் 90களில் சச்சின் அடித்தால் தான் வெற்றி என்ற பரிதாப நிலையில் தான் இருந்தது.

womens

இருப்பினும் சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி என்று 2 மகத்தான கேப்டன்கள் தரமான இளம் வீரர்களை உருவாக்கி சிறப்பான வகையில் வழிநடத்தி 2007, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றதால் இன்று தொடர்ச்சியாக வெல்லும் உலகின் நம்பர் ஒன் அணியாக உருவெடுத்துள்ளது. ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் இன்னும் 90களில் ஆடவர் அணி எப்படி விளையாடியதோ அதே போலவே இன்னும் மகளிரணி விளையாடி வருகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அசால்டாக 3க்கும் மேற்பட்ட உலக கோப்பைகளை வென்று தங்களது அலமாரியில் அடுக்கி வைத்துள்ளனர்.

- Advertisement -

பழிதீர்க்கும் நேரம்:
ஆனால் வரலாற்றில் இதுவரை ஒரு உலக கோப்பைகளை கூட இந்திய மகளிரணி வென்றது கிடையாது. அதைவிட 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திடம் இறுதிப் போட்டியில் தோற்ற இந்தியா உலகக் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை நழுவ விட்டது. மேலும் 2020 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 2003 ஆடவர் உலக கோப்பையில் எப்படி தோல்வி அடைந்ததோ அதேபோல் கதறகதற அடிவாங்கி இந்தியா படுதோல்வியடைந்தது. மொத்தத்தில் ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திடம் வரலாற்றில் இந்தியா பெற்ற வெற்றிகளை விட வேதனைகளே அதிகம்.

indianwomescricket

அந்த நிலைமையில் 2017 மற்றும் 2018 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் பைனல் மற்றும் செமி பைனலில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை உலகக்கோப்பைக்கு நிகரான இந்த காமன்வெல்த் அரையிறுதியில் அதுவும் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து பழி தீர்த்துள்ளது. அடுத்ததாக இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காலம் காலமாக ஆறாத ரணங்களை கொடுத்த ஆஸ்திரேலியாவை தோற்கடிக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது.

- Advertisement -

ஆனால் அது இந்தியாவுக்கு அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் வரலாற்றில் 25 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 16 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது 6 போட்டிகளில் மட்டுமே வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : IND vs WI : தொடர்ந்து சொதப்பினாலும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன்? – ரோஹித் சர்மா விளக்கம்

இந்த தொடரில் ஜுலை 29இல் நடந்த லீக் போட்டியில் கூட தோற்றுப்போனது. இருப்பினும் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்ற வகையில் வலுவான ஆஸ்திரேலியாவை இம்முறை தோற்கடித்து அத்தனை காயங்களுக்கும் பழிதீர்த்து தங்கப்பதக்கத்தை வென்று மகளிர் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை இந்தியா இன்று துவங்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement