IND vs WI : தொடர்ந்து சொதப்பினாலும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கியது ஏன்? – ரோஹித் சர்மா விளக்கம்

Rohit-and-Avesh
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 132 ரன்கள் மட்டுமே குவித்ததால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Avesh Khan 1

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை தற்போதைய நிலையில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் பந்துவீச்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆவேஷ் கானுக்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா நேற்றைய நான்காவது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு அளித்தார். தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆவேஷ் கான் நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Avesh Khan

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் காரணமாக ஆவேஷ் கானுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆவேஷ் கானை சேர்த்தது ஏன் என்பது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : நாங்கள் ஆவேஷ் கானின் திறனை நன்கு அறிந்துள்ளோம். அதன் காரணமாகவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பினை வழங்கி வருகிறோம். எல்லா வீரர்களுக்குமே ஒன்று இரண்டு போட்டிகள் மோசமாக அமையும். அந்த வகையில் ஆவேஷ் கானுக்கு கடந்த சில போட்டிகள் மோசமாக அமைந்தது.

இதையும் படிங்க : IND vs WI : இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்று தான். ஆனாலும் – தோல்விக்கு பிறகு பூரான் பேசியது என்ன?

இருப்பினும் அவரது திறன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நமது அணியில் உள்ள வீரர்களுக்கு போதுமான வாய்ப்பினை வழங்க வேண்டும். அந்த வகையில் ஆவேஷ் கான் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பை வழங்கியதாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement