பெங்களூருவை தனது கோட்டையாக்கிய ரோஹித்.. கங்குலி, சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்து 3 புதிய வரலாற்று சாதனை

Rohit Sharma Records 2
- Advertisement -

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 12ஆம் தேதி பெங்களூரு நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே வெளியேறியதால் ஆறுதல் வெற்றியும் பெறும் முனைப்புடன் களமிறங்கிய நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 410/4 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 61, சுபமன் கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, கேஎல் ராகுல் 102 ரன்கள் எடுத்தனர். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையும் இந்தியா படைத்தது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனைகள்:
முன்னதாக இப்போட்டியில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து பெங்களூருவில் இருக்கும் எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா 32* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ரோகித் சர்மா உடைத்துள்ளார்.

இதற்கு முன் சார்ஜா மைதானத்தில் சச்சின் 30 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய ஒரு சாதனையாகும். இது போக இந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் சர்மா இப்போட்டியையும் சேர்த்து இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் 503 ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 500 ரன்கள் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

- Advertisement -

அது போக ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற சௌரவ் கங்குலியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 503* (2023)
2. சௌரவ் கங்குலி : 465 (2003)
3. விராட் கோலி : 443 (2019)
4. முகமது அசாருதீன் : 332 (1992)
5. கபில் தேவ் : 303 (1983)

இதையும் படிங்க: சொந்த ஊரில் சரவெடி தீபாவளி கொண்டாடிய ராகுல்.. 32வது நாளில் ரோஹித் சாதனையை உடைத்து புதிய மாஸ் சாதனை

அதை விட 2019இல் 648 ரன்கள் அடித்த அவர் இந்த உலகக்கோப்பையில் 503* ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

Advertisement