- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs NZ : அதிரடி தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா – தோனியை முந்தி புதிய வரலாற்று சிக்சர் சாதனை (வீடியோ இணைப்பு)

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் 3 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றி 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் மற்றொரு பயணமாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. அதில் கடந்த வாரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்த நியூசிலாந்து கடந்த மாதம் இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் இத்தொடரில் கோப்பையை வெல்ல களமிறங்கியுள்ளது.

உலகின் டாப் 2 அணிகள் மோதுவதால் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் ஜனவரி 18ஆம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் தேர்வான நிலையில் கேஎல் ராகுலுக்கு பதில் கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்த இசான் கிசான் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

சிக்ஸர் சாதனை:
அதே போல் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாகூர் ஆகியோரும் அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு வழக்கம் போல பவர் பிளே ஓவெர்களில் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டாலும் சிங்கிள், டபுள் ரன்களை எடுக்க தடுமாறிய ஓபனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல தொடக்கம் கொடுத்து 34 (38) ரன்களில் அவுட்டானார்.

குறிப்பாக 2 சிக்ஸர்களை தெறிக்க விட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சாதனை தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 125*
2. எம்எஸ் தோனி : 123
3. சச்சின் டெண்டுல்கர் : 71
4. விராட் கோலி : 66
5. யுவராஜ் சிங் : 65

- Advertisement -

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டையும் (9619) மிஞ்சிய ரோகித் சர்மா (9630) 16வது இடத்திற்கு முன்னேறினார். ஆனால் அவருக்கு பின் களமிறங்கிய விராட் கோலி 8 (10) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த இசான் கிஷான் வாய்ப்பை பயன்படுத்தாமல் 5 (14) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் ரோகித் சர்மாவுடன் களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட சுப்மன் கில் விரைவாக ரன்களை சேர்த்து அரை சதம் கடந்து 78* ரன்களுடன் விளையாடி வருகிறார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் சற்றுமுன் வரை 25 ஓவர்களில் இந்தியா 154/3 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:விராட், ரோஹித் மாதிரி 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய அவரை பெஞ்சில் விடாதீங்க – அசாருதீன் கோரிக்கை

களத்தில் அவருக்கு உறுதுணையாக மற்றொரு புறம் சூரியகுமார் யாதவ் தனது பங்கிற்கு அதிரடியாக ரனகளை சேர்த்து வருகிறார். இப்போட்டியில் நியூசிலாந்தின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் நிலையில் அதை சமாளித்து குறைந்தது 250 – 300 ரன்களை எடுக்கும் முயற்சியுடன் இந்திய அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by