விராட், ரோஹித் மாதிரி 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய அவரை பெஞ்சில் விடாதீங்க – அசாருதீன் கோரிக்கை

Azharuddin
Advertisement

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று அசத்தியது. ஆனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானித்த கடைசி போட்டியில் அதிரடி சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சூரியகுமார் யாதவ் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். கடைசி போட்டியிலும் வழக்கமான 4வது இடத்தில் வாய்ப்பு பெறாத அவருக்கு பெயருக்காக 6வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்பட்டது.

Suryakumar Yadav Virat kohli

இருப்பினும் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 3 வருடங்களில் இதர இந்திய வீரர்களை காட்டிலும் அபாரமாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ள அவர் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் உள்ளார். குறிப்பாக சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் அவர் தனது வாழ்நாளின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார் என்ற காரணத்தாலேயே ரஞ்சிக் கோப்பையில் 44+ என்ற பேட்டிங் சராசரியை வைத்திருந்தும் 80+ பேட்டிங் சராசரியை வைத்துள்ள சர்ப்ராஸ் கானுக்கு பதில் அடுத்த மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

விராட், ரோஹித் மாதிரி:
மேலும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களில் ஒருவராக கருதப்படும் அவரை அணி நிர்வாகம் டி20 வீரராகவே பார்த்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் தேர்வு செய்தாலும் விளையாடும் 11 பேர் அணியில் நம்பி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க யோசித்து வருகிறது. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போல சூரியகுமார் யாதவும் 3 வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பாராட்டியுள்ளார்.

எனவே தற்சமயத்தில் அவர் கொண்டுள்ள நல்ல ஃபார்மை வீணடிக்காமல் வாய்ப்பு கொடுக்குமாறு இந்திய அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்ட அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பொதுவாக ஒரு வீரர் நல்ல பார்மில் இருக்கும் போது அவரை பெஞ்சில் அமர வைப்பது சரியான முடிவல்ல. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடும் திறமை கொண்டுள்ளார். மேலும் அவர் தன்னுடைய கடைசி ரஞ்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்”

- Advertisement -

“இதுவரை சூரியகுமார் யாதவ் பேட்டிங்கை பார்த்த என்னால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் போல அவராலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட முடியும் என்று உறுதியாக சொல்ல முடியும். சொல்லப்போனால் நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவுக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் விளையாடக்கூடிய ஒரு தரமான வீரர் கிடைத்துள்ளார்” என்று கூறினார்.

azharuddin

மேலும் தற்சமயத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அபாரமான ஃபார்மில் இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசான் கிசான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று அசாருதீன் கூறியுள்ளார். ஒருவேளை கிடைக்கும் பட்சத்தில் முதல் போட்டியிலேயே அற்புதமாக செயல்பட்டு அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஃபிளாட்டான பிட்ச்சில் கத்துக்குட்டிகளை அடிப்பவர் தானே விராட் கோலி – கலாய்த்த பாக் நிரூபரின் மூக்கை உடைத்த பாக் வீரர்

“ஆரம்பத்திலேயே அவர்களுக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாகும். ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைத்தால் அந்த இடத்தை நிரூபிக்கும் அளவுக்கு அவர்கள் சிறப்பாக செயல்பட்டு அதை தக்க வைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement