ஃபிளாட்டான பிட்ச்சில் கத்துக்குட்டிகளை அடிப்பவர் தானே விராட் கோலி – கலாய்த்த பாக் நிரூபரின் மூக்கை உடைத்த பாக் வீரர்

VIrat Kohli IND vs PAK
- Advertisement -

இலங்கைக்கு எதிரான நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற அசத்திய இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்திய பேட்டிங் துறையின் தூணாக உருவெடுத்துள்ளார்.

இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் சந்தித்த சரிவையும் விமர்சனங்களையும் 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்து நொறுக்கிய அவர் அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அதிக ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதே போல் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதமடித்த அவர் நடைபெற்று முடிந்த இலங்கைத் தொடரின் முதல் மற்றும் கடைசி போட்டியில் அடுத்தடுத்த சதங்களை அடித்து 284 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சொந்த வீரரே பதிலடி:
அப்படி அவர் பார்முக்கு திரும்பியுள்ளது பலரை மகிழ்ச்சியடைய வைத்தாலும் சிலருக்கு வன்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். அந்த வரிசையில் இணைந்த பிரபல பாகிஸ்தான் பத்திரிக்கை நிரூபர் “பரித் கான்” எப்போதுமே அழுத்தமில்லாத போட்டிகளில் சுமாரான எதிரணிகளுக்கு எதிராக பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று ட்விட்டரில் வன்மத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது பற்றி அவர் பதிவிட்டது பின்வருமாறு.

“அழுத்தமில்லாத போட்டிகளில் தொடர் ஏற்கனவே முடிந்த போது சூழ்நிலை பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் போது தான் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார். அதுபோன்ற போட்டிகளில் தன்னம்பிக்கை மற்றும் பார்மை மீட்டெடுப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அவர் இதே செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கடந்த அக்டோபர் மாதம் பேட்டிங்க்கு சவாலான மெல்போர்ன் மைதானத்தில் 160 ரன்களை துரத்தும் போது 31/4 என தடுமாறி மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கிய இந்தியாவை வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி 82* ரன்கள் குவித்து உங்களது பாகிஸ்தானை ஓடஓட அடித்து நொறுக்கியது மறந்து விட்டீர்களா என அவருக்கு தக்க பதிலடி கொடுக்கிறார்கள்.

அப்படி நியாயமில்லாமல் பேசிய அவரது கருத்தால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் சோஹைப் மக்சூத் இப்படியே வன்மத்தை காட்டிக்கொண்டு எத்தனை நாட்கள் மாறாமல் இருப்பீர்கள் என்று கொடுத்த பதிலடி பின்வருமாறு. “அவர் அழுத்தம் இல்லாத போது தான் சிறப்பாக செயல்படுவார் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா. மாறுங்கள் நண்பா. 2 தவறுகள் ஒன்றை சரி செய்யாது” என்று கூறினார். அதற்கும் அந்த நிரூபர் பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“சோஹைப் பாய். ஒரு வீரருக்கு சாதகமான சூழ்நிலைகள் தங்களது பார்ம் மற்றும் தன்னம்பிக்கையும் மீட்டெடுக்க உதவுவதை போல் வேறு எதுவும் உதவாது. அந்த வகையில் சுமாரான பார்மில் தடுமாறிய போது ஆசியக் கோப்பையில் ஏற்கனவே இந்தியா வெளியேறிய போது அவர் ஃபார்முக்கு திரும்ப ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி தேவைப்பட்டது. அதே போல் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக தொடரை இழந்த போது கடைசி போட்டியில் அவர் சதமடித்தார்” என்று கூறினார்.

அதற்கு சோஹைப் பதிலளித்தது பின்வருமாறு. “அவர் ரன்களை எடுக்காத போது அவர் அந்த தார் ரோட்களில் கூட ரன்கள் எடுக்கவில்லை. மேலும் இதற்கு முன் அவர் சதமடிக்காத நாடு அல்லது ஆடுகளங்கள் இருந்தால் சொல்லுங்கள். விராட் கோலியை போல இந்திய ரசிகர்கள் பாபர் அசாமை கிண்டலடித்தாலும் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை நாம் அறிவோம். எனவே இதை தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs NZ : அணியின் நலனுக்காக உங்களது 3வது இடத்தை அவருக்கு தியாகம் செய்ங்க – விராட் கோலிக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை

அப்படி சொந்த நாட்டு வீரரே பதிலடி கொடுத்த அந்த பாகிஸ்தான் நிரூபரை ரசிகர்கள் மேலும் கலாய்க்கிறார்கள். அத்துடன் விராட் கோலியாவது பிளாட்டான பிட்ச்களில் அடிக்கிறார் உங்களது பாபர் அசாம் தார் ரோட்டில் கூட அடிப்பதில்லை என இந்திய ரசிகர்கள் அந்த நிரூபருக்கு மேலும் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement